திருக்கடையூர் அபிராமி*
தேரினிலே பவனி வர- அபிராமி பட்டரோ -
தேரினிலே பவனி வர- அபிராமி பட்டரோ -
ஆனந்தகூத்தாட - தமக்கும் இதில் பங்குண்டோ!
நிலவாக காட்சி தரும் அணிகலனோ ஐயமுற..
'ஒளிஇன்றி உலகேது* 'அம்பிகையின் புன்சிரிப்பால் ..
வான்மதியும் அகம் மகிழ-
"அணிகலனும் நிலவான காரணத்தை அறிவாயோ!
முழுகதையும் கவிதை வடிப்பதற்கு வழியுண்டோ? "
முழுகதையும் கவிதை வடிப்பதற்கு வழியுண்டோ? "
மேளமோ தாளமிட-கேட்பீரே
நாதஸ்வரத்தின் இசைதனையே!
அளவு கடந்த பக்தியினால்..
பட்டரின் பிதற்றல் கேட்ட
சோழ மன்னன் சரபோஜியோ
"தேய்பிறை திதி அன்று மதி காணா பட்டர் தலை கொய்க"
என புணர- செவி கேட்ட
பட்டரோ
மனம் கலங்கி உரி மேலே
நெஞ்சுருக கவி பாட
இது என்ன விந்தையடி
என் தோழி!
காத்தருளும் அம்பிகையின் அணிகலனோ நிலவாக*
வானத்திலே.
இன்றும் அபிராமி பட்டரின் நினைவாக திருக்கடவூரிலே தை அமாவாசை பெரு விழாவாக கொண்டாடப்படுகின்றது.
நிலவும் -அவளும் ஒன்றே*
அவளின் முழுமையான
சக்தி பௌர்ணமி *அன்று
நிலவிலே பூரணமாக
நிறைந்து இருக்கும் என்பதற்கு
அபிராமி பட்டரின் வரலாறு நமக்கு உணர்த்தும் அன்றோ..
இந்த பூமி -கடல்
காற்று -வான் -அனைத்தும்
தமக்குள் அடக்கமாக
தாமே ஆதிபராசக்தியாக*
அன்னையின் அம்சமாக*
தாய்மையின் சிகரமாக *
இந்த பிரபஞ்சத்தையே
ஆளுகின்ற தாய்
என்பது அம்பாளின்
பெருமையன்றோ..
நினைத்தது ஜெயமாக
பவுர்ணமி *அன்று
அம்பாளை நினைத்து
விரதமிருந்து விளக்கேற்றி
முடிந்தால் கோவிலுக்கு
சென்று அம்மனை வழிபட்டு
நிலவு தரிசனம்*
கண்ட பிறகு அன்னம் உண்டு விரதத்தை முடிக்கலாம்.
அம்பிகையின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்தால் ஒரு பொழுதும் நம்மை அவள் கை விட மாட்டாள் என்பதை மனதில் கொண்டு அவள் பாதம் பணிந்து அனைத்து அருளும் பெறுவோமே*
Copyrighs at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக