ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

மலரவன் மலர்கின்றான்



அதிகாலை துயில் எழுவது என்பது வாழ்க்கையில் என்றும் இனிய தன்றோ!

மலரவன் மலர்கின்றான்*
 என சேவலோ ஒலி எழுப்ப ..

அதைக் கண்ட மலர்களோ
மலர்கின்ற அழகை பார்த்து மகிழ்ச்சியுற்ற மாதவனோ திசையெங்கும் தன்
ஒலி கீற்றால்  ஒளிவீச..

 'இயற்கை எல்லாம்
 எனக்கே சொந்தம்' என நினைத்த- 
பறவைகளின் ஒலி அலையோ
  கானமாய்  காதில் விழ! 

கதிரவனின் ஒளி* கண்களுக்கு புத்துணர்ச்சி என அறிந்து 
காலை  வணக்கத்தை  தினமும் கதிரவனோடு பகிர்வோமே..

ஓம்  அச்வத் வஜாய வித்மஹே 
பாஸ ஹஸ்தாய தீமஹி
 தன்னோ  சூர்யா ப்ரசோதயாத்

 என்று தினமும் சூரிய தேவனுக்கு காலை பொழுதினிலே நமஸ்காரம் செய்து வந்தால் .. 

நமக்கு அழகு ஆரோக்கியம்- பலம் -ஆற்றல் அனைத்தையும் கொடுப்பார் சூரியபகவான் *


தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கலாம்.

வாழ்வது ஒன்றும் பெரிதன்று
 இருக்கும் வரை 
நோய் நொடியின்றி 
இனிதாக வாழ்ந்திடுவோம்
உடலை பேணி காத்திடுவோம்.

Copy rights at balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக