திருமண பந்தத்தில் கால்பதித்து மழலையின் எச்சில் பட்டு
எமை மறந்து- தாய்மையின்
சுவை தனிலே கனிந்துருகி அனுபவத்தில் ஆட்கொண்டு
பழமாகி -முதுமையின் படி ஏறி
மலைத்து நின்று! தெய்வத்தின் அம்சமாக எமை நினைத்து
மனம் நிறைந்து மகிழ்ச்சியோடு வாழ்த்துகின்றேன்*
இதுதான் பெரியவர்களுடைய சிறப்பு*
அவர்கள் சொல்லும்வாழ்த்துதான்'
"பதினாறு பேறு பெற்று பெருவாழ்வு வாழ்க"
அந்த பதினாறு பேறுகள் -
அழகு *அறிவு* இளமை* கல்வி *
ஆயுள் *பெருமை* துணிவு* ஆரோக்கியம் *வலிமை *வெற்றி*
புகழ் *செல்வம் *உணவு *நன்மை* உண்மை*நல்வினை*
அனைத்து செல்வங்களும் பெற்று பெரியவர்கள் சொற்படி வாழ்ந்து மனிதப் பிறவியின் பயனை அடைவோமே.
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக