ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

புலம்பலும் ஒரு முயற்சிதானே!


படிப்புமிலா - அறிவுமிலா
 மாடு மேய்க்கும் வெகுளி அவன் அவமான சொல் கேட்டு
 மனமெலாம் - புண்ணாக
கோவில்தனிலே 
அமர்ந்த அவன் 
வாடிக்கையான புலம்பல் கேட்டு
 காளிதேவியோ* மனமிறங்க
தேவியின்  பார்வை பட்டு
கவிஞரான அதிசயமோ!
 சோழ மன்னன் அரசவையில் 
புலவர் ஆனதும் ஓர் ஆச்சரியமோ! 

அவனோட பேர்தான் மகாகவி காளிதாஸ்படிப்பறிவே இல்லாத காளிதாஸ்
அதை நினைச்சு நினைச்சு
 காளிதேவி கேட்ட புலம்பிண்டே இருக்கான்..
 அதுவே ஒரு முயற்சி தானே !

'மாடு மேய்ச்சோம்,  நேரம் ஓடுது சாப்பிட்டோம் -படுத்தோம் 'என
  வாழ்ந்துட்டு போயிருந்தால்
 மகாகவி என்ற பட்டம் பெற்ற காளிதாஸ் யார்? 
என்று நமக்கு தெரியாம போயிருக்கும். அவனோட முயற்சியால்தான்
 என்ன முயற்சின்னு கேட்காதீங்க!
புலம்பலும் ஒரு முயற்சி தானே* 

அமைதியாக இருத்தலை விட புலம்பலுக்கு ஒரு தீர்வு
 நிச்சயமாக உண்டு .
அதற்காக சத்தமா வெளியில
 புலம்பிண்டு  இருக்க வேண்டாம் மனசுல நிறைய கேள்வி கேளுங்க.. கேள்வி?  என்பதும்
 ஒரு புலம்பல் தானே 
படிப்புக்கு அருள் வாரி வழங்கும் சரஸ்வதி தேவியை மனசில நெனச்சிண்டு  கேள்வி நிறைய அவகிட்ட கேளுங்க.. 
அதற்கு நிச்சயமாக நல்ல தீர்வு கிடைக்கும்

ஆறு அறிவோடும் *
பேரு பதினாறும் *
கனிந்த அன்போடும் *
கல்வி சுடரோடும்*
ஒழுக்க நெறியோடு*
 தெய்வ அருள் பெற்று*
 இந்த பூமிதனில்
ஒப்பில்லா மாணிக்கமாய் சுடர் வீசி* பல்லாண்டு பல்லாண்டு வாழியவே.

Copy rights at Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக