சித்திரை மாத சிறப்புகள்
மங்கலஇசை மனதிலே
இசைந்தாட *
வண்டுகளோ!
மொட்டு மலராக
மகிழ்ச்சியோடு இசைபாட.
பறவைகளோ புத்தாண்டே
பறவைகளோ புத்தாண்டே
வருக*வருக* வென
கிளை தனிலே கீச்சிட
அதைக்கேட்டு -
மரத்திலுள்ள கனிகள்
எல்லாம் -கனிவோடு
அசைந்தாட...
- இதை அறிந்து விலங்குகளோ!
ஆனந்தமாய் ஒருசேர
சிரித்த முகத்தோடு*
நேர்கொண்ட பார்வையோடு*
ஒற்றுமை உணர்வோடு*
துணிவு கொண்ட நெஞ்சோடு புத்தாண்டை வரவேற்போம்*
சித்திரை வருடப்பிறப்பு*
அன்று நீராடி புத்தாடை
அணிந்து வாசலிலே
வண்ணக் கோலமிட்டு..
வேப்பிலை* மாவிலை *மலர் *
கொண்டு வீடு முழுதும்
அலங்கரித்து
சுவாமி பாடல்கள் *ஒலிக்க..
சூரிய பகவானை வணங்கி மாக்கோலத்தில் அழகு
தனில் *ஐந்து முக விளக்கை
ஏற்றி* சாம்பிராணி மணம்
கமழ *ஒரு மங்கலகரமான
சூழ்நிலையில்..
அனைவரும் ஆனந்தமாய் கொண்டாடும் மகிழ்ச்சிகரமான திருநாளே
சித்திரை திருநாள்*
மங்களகரமான
வாழ்க்கை அமைவதற்கு
சிறப்பான 3 விஷயங்கள்..
சிறப்பு -1 மாவிலை தோரணம்*
தமிழ் வருடப்பிறப்பான சித்திரை அன்று மாவிலை தோரணம் வாசல்படியை அலங்கரித்தால் அதிர்ஷ்ட தேவதை ஆனந்தத்தோடு வீட்டினுள் நுழைவாள்*
அஷ்டலக்ஷ்மிகளின் வாசம்
வீடு முழுவதும் நிறைந்து
நம்முடைய வாழ்க்கையில் துன்பம் என்பது விலகி அனைத்தும் சுபமாக நடக்கும் *
சிறப்பு -2 பஞ்சாங்கம் வைத்து படைப்பது*
நாள் -நட்சத்திரம்
சுபதினம் -சுப ஓரைகள் என அனைத்தும் பார்த்து
பார்த்து செய்யும் நமக்கு
அத்தனை நல்ல
விஷயங்களையும்
ஈர்க்கும் சக்தி
பஞ்சாங்கத்திற்கு உண்டு ..
சித்திரை அன்று கோவிலில்
மட்டுமன்றி ஒவ்வொரு
வீட்டிலும் பஞ்சாங்கத்தின்
வாசிப்பு
நிகழ்ந்தால் அந்த குடும்பம்
சுபிட்சமாக இருக்கும்*
சுபமான காரியங்கள்
அனைத்தும் நடக்கும்*
வருடப்பிறப்பு அன்று
புதிய பஞ்சாங்கம்
வாங்கி வந்து மஞ்சள்
குங்குமம் இட்டு- மலர் வைத்து
ஒரு ரூபாய் நாணயம் வைத்து வழிபடுவது சிறப்பு.
சிறப்பு -3 முக்கனிகளில்
முதன்மையான மாங்கனி பச்சடி*
இனிப்பு *கசப்பு *துவர்ப்பு *
புளிப்பு *காரம் *என ..
அனைத்தும் கலந்த
வாழ்க்கையின் தத்துவத்தை
புரிந்து கொண்டு
வாழ்க்கையை எளிமையான
முறையில் வாழ்ந்து
தெய்வத்தின் அருளை
பெற வேண்டும்
என்பதே மாங்காய்
பச்சடிக்கான சிறப்பு*
மாங்காய் பச்சடி செய்முறை
.
நறுக்கிய மா எனும்
காய் எடுத்து வெல்ல
பாகை அதில் இட்டு
புளிக் கரைசல் உலவ
விட்டு வேக வைத்து
இறக்கி வைத்து ..
கடுகு -பருப்பு மிளகாயை
எண்ணையிலே
பொரிய விட்டு -
வேப்பம் பூ மலர் சேர்த்து
பச்சடியில் கலந்துவிட்டால்
படைத்தலுக்கு உகந்ததாக
மாங்காய் பச்சடி ஆகிடுமே.
அனைவருக்கும் நிழல்
தரும் மாமரம் போன்று
மனிதப் பிறவியில் பிறந்த நாம் மற்றவர்களுக்கு உதவி செய்து..
அதில் ஆனந்தத்தை கண்டு வாழ்க்கையின் பயனை
அடைவோமே.
ஆறு அறிவோடும்*
பேறு பதினாறும் *
கனிந்த அன்போடும் *
கல்வி சுடரோடும்*
ஒழுக்கநெறியோடும்*
தெய்வ அருளும்பெற்று*
ஒப்பில்லா மாணிக்கமாய்
சுடர் வீசி
பல்லாண்டு பல்லாண்டு
வாழ்ந்திடுவோம்.
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக