வியாழன், 6 செப்டம்பர், 2018

சங்கடகர சதுர்த்தி அன்று விரதம் இருக்கும் முறை


சங்கடகர சதுர்த்தி விரதம் இருக்கும் முறை..

சங்கடங்கள் அனைத்தும்
தீர்ப்பவன்
 விநாயகப்பெருமான் *

விரைவில் திருமணம் நடக்க சங்கடகர சதுர்த்தி வழிபாடு 🌹🍀🌹👇👇👇


அவனே முக்கண் முதல்வனாக முப்பெரும் தலைவனாக 
திகழ்பவன் *

அருகம்புல் மாலை சாற்றினால் ஆனந்தம் அடைபவன்*

 சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருப்பவர்களுக்கு அழியாத செல்வத்தை கொடுப்பவன் *

 வேலை ஆயிரம் இருப்பினும் அரைமணிநேரம் போதுமே!
 கணபதியை நினைப்பதற்கு ..

இந்த சங்கடஹர சதுர்த்தியில் விநாயகப்பெருமானை
எளிமையான முறையில்
 வழிபடும் முறையை அறிவோமே..

சிறப்பு -1 *

தலையிலிருந்து 
பாதம் வரை
 ஸ்னானம் செய்து 
புனிதம் அடைதல் *

சிறப்பு- 2 *

குரோமம் -காமம்
 விடுத்து மனம் 
முழுதும் அமைதி 
வேண்டி சாத்வீகமான
 உணவு எடுத்து 
கொள்ளுதல்*

 சிறப்பு- 3 *

மாலை வேளையில்
 புதிய மலரால் 
அலங்கரித்து ஐந்து முக 
விளக்கை ஏற்றி 
அருகம்புல்லும் 
பால் கற்கண்டு வைத்து
 அகமும் புறமும் 
ஒளிமயமாக இருக்க 
வேண்டும் என வேண்டி
 விளக்கை ஏற்றுதல்*

சிறப்பு -4 *

 வடக்கு நோக்கி
 மனையிலே அமர்ந்து 
 கீழ்க்காணும் மந்திரத்தை
 சொல்லி நம் மனதில் இருக்கும் வேண்டுதல்களை வைத்தல்*

ஸ்ரீ  கணேஷ மந்திரம் * 
.
ஓம் சுமுகாய நம* 
ஓம் ஏக தந்தாய நம*
 ஓம் கபிலாய கஜகர்ணிகாயநம
 ஓம் லம்போதராய நம* 
 ஓம் விகடாய நம * 
ஓம் விக்னராஜாய நம * 
ஓம் கணாதிபாய நம * 
ஓம் தூமகேதவே நம *
 ஓம் கணாத்யஷாய நம*
 ஓம் பாலசந்திராய நம* 
 ஓம் கஜானனாய நம * 
ஓம் வக்ர துண்டாய நம* 
ஓம் ஸூர்ப்பகர்ணாய நம* 
 ஓம் ஹேரம்பாய நம* 
 ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம* 

 ஓம்* எனும் மந்திரத்தோடு 
விநாயகரின் திருநாமங்களும் 
சேர்ந்து உச்சரிக்கும் 
போதினிலே -


தெய்வீக அதிர்வலைகள்- நம் 
 ஆத்மாவின் உள் சென்று
 தீய சக்திகள் விலகி
 நல்ல சிந்தனை கிடைத்து
 நேர்வழிப் பாதையில் அழைத்துச் செல்லும் ஆற்றல் கிடைக்கின்றது. 

             ஸ்ரீ கணேஸ மந்திரம்* 
      அது நம்மை மட்டுமல்ல! 
          நம்மை சுற்றி இருக்கும்                அனைவருக்கும் 
     நன்மை செய்யக் கூடிய 
   சக்தியை கொடுக்கும் 
வலிமை உண்டு. நாம் நினைக்கும் எண்ணங்கள் பூர்த்தியாகும்*

சிறப்பு -5 *

சந்திரனைக் கண்டு
 மனம் முழுதும் நிறைவாக அவ்வொளியை 
தான் வாங்கி நிறைவு 
கொண்டு அதன் பின் 
உணவு உண்டு 
பால் கற்கண்டு 
சேர்த்து அருந்தி
விரதத்தை முடித்தல்*


தொடர்ந்து
 ஐந்து சங்கடஹரசதுர்த்தி
 விரதம் இருப்பதாக 
வேண்டி

 சங்கடஹர சதுர்த்தி 
அன்று
 மாலை விளக்கேற்றி 
வடக்கு நோக்கி 
அமர்ந்து ஸ்ரீ கணேச 
மந்திரத்தை* 
உச்சரித்து வந்தால் 
 நினைத்தது
 உடனே நிறைவேறும்.


 எண்ணம் பூர்த்தியானதும் 
விரதத்தை நிறுத்திவிடாமல் 
ஐந்து சங்கடஹர 
சதுர்த்தி முடியும் வரை 
விரதம் இருந்து 
விரதத்தை பூர்த்தி
 செய்ய வேண்டும் .


ஸ்ரீ கணேஷ மந்திரம்*
நாமத்தை உச்சரிக்கும் 
அந்நேரமே * தடைகள் 
அனைத்தும்
 தகர்ந்து விடும் 
 அக்கணமே*


 கணேசனின் அழகு 
மந்திரத்திலே*
 கணேசனின் நாமம்
 மனதினிலே* 
 வாழ்க்கையின் ரகசியம்
 வாக்கினிலே*
 வருகின்ற சோதனையோ 
விடுபடும் -விரைவினிலே*
 என வேண்டி 
 ஸ்ரீகணேச நாமத்தை* 
 உச்சரித்து பெருமானின் 
அருளை பெறுவோமே!




லக்ஷ்மி குபேர பூஜை🙏🌹👇👇

https://balakshitha.blogspot.com/2019/10/blog-post_21.html

அனைத்து திருஷ்டியும் விலக கல் உப்பு பரிகாரங்கள்🙏🌹👇👇

https://youtu.be/0p5op0-Zjwk



Copy rights at Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்