விநாயகருக்கு
ரொம்ப நாளா
ஒரு ஆசை.. எவ்வளவு
அழகா நம்ம தந்தையார்
சிவபெருமான்
நடனம் ஆடரார்!
நம்ம அம்மா
பார்வதி தேவி மட்டும்
என்ன சும்மாவா !
அவங்களும்
ரொம்ப அழகா நடனம்
ஆடுறாங்க ..அவங்களுக்கு
மகனாக பிறந்து
நமக்கு மட்டும் ஏன்
இந்த நாட்டியம் வரவே
மாட்டேங்குது !கவலையோடு அமர்ந்திருக்கார்
நம்ம கணேசன்..
இதைக் கண்ட
நந்திதேவர் !
அருகிலே வந்து
காரணத்தை கேட்க..
தன்னோட மனக்கஷ்டத்தை விநாயகப்பெருமான் கூற நந்திதேவருக்கு உடனே
சிரிப்பு வந்துடறது ..
இது என்ன
பெரிய விஷயமா !
என்ன சொல்லிணடே
விநாயகரின் காதில்
ஏதோ சொல்ல
விநாயகர் முகம்
அப்படியே
மலர்ந்து போயிடறது!
அப்படி என்னதான்
சொல்லியிருப்பார் நந்தி தேவர் !
இந்தப் பாட்டுல ஏதாவது விடை தெரியுதான்னு பார்க்கலாம் ..
சுற்ற சுற்ற என்
மனமும் சேர்ந்து சுற்ற*
சுற்ற சுற்ற தீவினைகள்
அகன்று போக*
சுற்ற சுற்ற நோய்
நொடிகள் அற்றுப் போக *
சுற்ற சுற்ற துன்பமெலாம்
தொலைந்து போக*
சுற்ற சுற்ற சோம்பல்
எல்லாம்தோற்று
போக *
சுற்றியது யார்
என யான் மலைத்து நிற்க
வேலன் இன்றி மயிலும்
ஏன் தனித்து இருக்க !
விநாயகரின் பொற்கரமோ
வேலனின் பொன்னுடல்
பற்றியிருக்க
ஆனந்தத்தோடு
இருவரும் சேர்ந்து
சுற்ற அதைக் கண்ட
நம் மனமும் சுற்றதுவே*
விநாயகர் வேலவனை
தமிழ் கைகளாலும்
வாரி அணைத்து
கொண்டு கைலாயத்தை
சுற்றி வந்த அந்த
அற்புதமான நடன
காட்சியை லோகத்தில்
இருந்த அனைவருமே
ஆவலோடு கண்டு
களித்தனர் .நடனமாடிய
திருப்தியோடு
விநாயகரின் ஆசையும் நிறைவேறிவிட்டது*
ஆலயத்தை
பயபக்தியோடு
சுற்றி வாருங்கள்
அனைத்து துன்பங்களும்
பறந்தோடும்* உடல்
சோர்வுக்கு மருந்து
கொடுக்கலாம் -ஆனால்
மன சோர்வுக்கு
என்றுமே மருந்து
கிடையாது
சுறுசுறுப்பாய் இருங்கள் *
சுகமான வாழ்க்கை
தானாக உங்களை
தேடிவரும்.
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்