சனி, 27 ஏப்ரல், 2019

ராம்


அஞ்சனை பெற்ற மைந்தன் அவன் *

ராம நாமத்தை இடைவிடாது ஜபித்து அவன் மார்பிலே இராமனை சுமந்து
தன் பக்தியை நெஞ்சை பிளந்து காட்டி நம்மை மெய்மறக்கச் செய்த வீர தீர அனுமனின் ஸ்லோகத்தை சொல்பவருக்கு ஒரு குறையும் வராது என உணர்ந்து .. சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று பத்து ரூபாய் போதுமே அவன் அருளை பெறுவதற்கு ..

துளசி மாலை சாற்றி வழிபட்டு ஆஞ்சநேயர் முன் அமர்ந்து கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்வோமே..
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு
அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை
வைத்தான் -அவன்
எம்மை அளித்துக் காப்பான்*

ஸ்லோகத்தின் கருத்து பற்றி அறிவோமே ..

அஞ்சிலே ஒன்று பெற்றான்..
ஐம்பூதங்களில் ஒன்றான
வாயு மைந்தன்
பெற்றெடுத்த ஹனுமனே*

அஞ்சிலே ஒன்றை தாவி..
ஐம்பூதங்களில் ஒன்றான ஆகாயத்தில் பறந்து *

அஞ்சிலே ஒன்று ஆறாக..
ஐம்பூதங்களில் ஒன்றான கடலையும் தாண்டி *

ஆரியர்க்காக ஏகி ..
சூரிய குலத்தில் உதித்த ராமனுக்காக சென்று*

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு ..
ஐம்பூதங்களில் ஒன்றான பூமாதேவி பெற்ற சீதையைக் கண்டு*

அயலார் ஊரில் அஞ்சிலே..
பகைவர் ஊரான இலங்கையிலே* ஒன்றை வைத்தான் அவன்..
ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பை வைத்தவன் அனுமனே*
எம்மை அளித்து காப்பான்.

என் செயல் இனிதே முடிய கருணை கொண்டு காப்பாயே*
நாம் சாற்றிய துளசி மாலையை பெற்ற மகிழ்ச்சியில் அவன் திளைத்திருக்க
ஹனுமன் முன் அமர்ந்து ஸ்லோகம் சொல்வதற்கான பலன்கள் ..

சிறப்பு -1*
வாழ்க்கையில் புதிய மாற்றம் உண்டாகும் .

சிறப்பு -2*
தோல்வி பயம் நீங்கி மனதில் தைரியம் உண்டாகும் .

சிறப்பு -3*
எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

சிறப்பு-4 ‌*
தொழிலில் நஷ்டம் விலகி லாபம் வர நன்மை பெருகும் .

சிறப்பு -5 *
பெருமாளின் பரிபூரணமான அருள் நமக்கு கிடைக்கும் .
ராம் ராம் ஸ்ரீ ராம்
ராம் ராம் ஸ்ரீ ராம்
ஓம் ஹனுமனே போற்றி போற்றி*
Copy rights at Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்