அனுமனுக்கு பிடித்தமான வடை மாலை
வடை மாலையில் ரகசியம்
அழகு* ஆற்றல்*ஆரோக்கியம் * பலம்* அனைத்தும் உடைய யாருமே நெருங்க முடியாத சூரிய பகவானையே பழம் என நினைத்து நெருங்கிய தீரன்
ஹனுமனின் வடைமாலை * ரகசியத்தை அறிந்து கொள்ளலாம்.
குழந்தையாக இருக்கும்போது அந்த அதிசயம் நடக்கின்றது..
செம்மாம்பழம் ஒன்று வானத்திலே தெரிய கண்டு - நாவினிலே எச்சூற அடுத்த நிமிடம் அனுமனோ வானத்திலே!
" அப்பழத்தை வேறொருவர் பறித்து விடுவாரோ" கவலையோ அனுமனுக்கு..
மிக வேகமாக பறக்கின்றான்
வாணர மழலையவன்*
அல்ல வாணர வீரன் * பறக்கின்றான் !
இந்த சமயம் பார்த்தா ராகு பகவான் வரவேண்டும்!
ராகு பகவான் -அந்த நேரம் பார்த்து தான் சூரிய தேவனை பார்ப்பதற்காக வந்து கொண்டிருக்கின்றார்..
ராகுவுக்கும் அனுமனுக்கும் கடும் போட்டி.
ராகுவும் சூரியன் தேவனை நெருங்குவதற்கு வேகமாக செல்ல அனுமனும் தானே முதலில் செல்ல வேண்டும் என்று வேகத்தோடு பறந்து செல்கிறான்.
போட்டி என்பது போட்டியல்ல புகழ் மாலை பெறுவதற்கான ஒரு முத்தாய்ப்பு*
போட்டியிலே ' நானே முதலிடம் வருவேன்' என ஒரு முயல் குட்டி தாவி ஓடுவது போன்ற ஆனந்தம் ஒளிந்து இருக்க வேண்டுமே தவிர சிங்கம் ஒன்று
மானை துரத்தி வேட்டையாடுகின்ற வேகம் வராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
போட்டி எனும் நிகழ்வுகள் அடிக்கடி நம் வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள்
தருவதுண்டு ..
இரண்டு பேர் போட்டியிட்டாலும் ஆயிரம் பேர் போட்டியிட்டாலும் ஜெயிப்பது ஒருவர் தான்
இந்த இரண்டு பேர் போட்டியிலே ஜெயித்தது ஹனுமனே*
விடுவாரா அனுமன்!
வெற்றிக்கு பரிசு யாதெது? என ஹனுமன் கேட்க நிறைவோடு அளிக்கின்றார் ராகு பகவான்.
போட்டியின் முடிவில் ஜெயித்துவிட்டால் புகழ்மாலையை ஏற்றுக்கொள்வதில் ஒரு ஆனந்தம்-அதே சமயத்தில் புகழ்மாலையை
மற்றவருக்கு சூடும் சூழ்நிலை வந்தால் அதை ஏற்று பேரானந்தம் அடையும் பக்குவம் வந்து விட்டால் இனிது இனிது- வாழ்க்கை இனிதன்றோ*
'தோற்றவர் 'எனும் பொருள் அகற்றி வெற்றிக்கு -தோள் கொடுத்த ராகுவிற்கோ
அளவில்லாத மகிழ்ச்சி..
மற்றவர் மகிழ்ச்சியில் மகிழ்வை காண்பதிலும் ஒரு மகிழ்ச்சிகொண்டு
ராகு பகவான் ஹனுமனுக்கு ஆசி வழங்குகின்றார்.
" தானிய வகையிலே தமக்கு பிடித்தமான உளுந்து கொண்ட பொருளினை
ஹனுமனுக்கு படைக்கும் பக்தர்களை ஒருபோதும் நான் நெருங்க மாட்டேன் .
தோஷங்கள் அணுகாமல் காத்துக் அருள்வேன் " என ஆசி வழங்குகிறார்.
நாம் எவ்வாறு உளுந்து வடை கொண்டு வடைமாலை சாற்றி படைப்பது போல வட இந்தியாவில் ஜாங்கிரி மாலை கொண்டு அனுமனுக்கு படைப்பது மிக சிறப்பு *
ஹனுமனுக்கு பிடித்தமான பொருட்களை பக்தியோடு சாற்றி வழிபடுகையில்
ஏற்படக்கூடிய சிறப்புகள்*
வெற்றிலை மாலை- நினைத்த காரியம் ஜெயமாகும்*
துளசி மாலை -மனோ தைரியம் உண்டாகும்*
வடை மாலை-தோஷங்கள் அனைத்தும் விலகும்*
சிந்தூரம்- செல்வ செழிப்பு உண்டாகும்* வெண்ணெய்- குடும்பத்தில்
மகிழ்ச்சி நிலவும்*
வாழ்க்கையில் மன அமைதிக்கு பழங்களை ஹனுமனுக்கு சாற்றி வழிபடுதல் நல்ல பலனை தரும்*
அனுமனுக்கு பிடித்தமான
ராமா* என்னும் நாமமே ஆயிரத்தெட்டு
சகஸ்ரநாமத்திற்கு ஒப்பாகும் *
சனிக்கிழமை தோறும்
அனுமனை வணங்குங்கள்*
அனைத்து தோஷமும் விலகி விடும்* அனுமனை வணங்குங்கள்*
ஆற்றல் செல்வம் பெருகி விடும் *
ஆற்றல் செல்வம் பெருகி விட்டால் அனைத்து செல்வமும் கூடிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக