செவ்வாய், 17 டிசம்பர், 2019

திருப்பாவை பாசுரம் -1 பாடல்களும் விளக்கங்களும்

ஆண்டாள்

திருப்பாவை பாடல் - 1



 

மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால் -நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் -சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்


பாடலில் உள்ள பொருளின்  சிறப்புகள் ..

சிறப்பு-1 ‌ மார்கழி மாதம் முழுமையான மிக அழகான நிலவின் ஒளி பேசுகின்ற சிறப்பான நன்னாள் இதுவே .

 சிறப்பு- 2  சிறப்பு மிகுந்த ஆயர்பாடியில் வசிக்கும் கன்னியர்களுக்கு செல்வ சிறுமிகளுக்கும்.. ஆண்டாளின் அன்போடு அழைக்க கூடிய அழைப்பு இதுவே.

 சிறப்பு- 3 கூர்மையான வேல்கொண்டு நம்மை அனைவரையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் அரிதான தொழில் செய்யும் நந்தகோபன் -அழகிய கண்களை கொண்டவளாய் யசோதா பிராட்டி அவர்களின் சிங்கம் போன்ற வீர மகனாக- கரிய நிறம் கொண்டவரான -சிவந்த கண்களை உடையவனாக- சூரியனை போன்ற பிரகாசமான முகத்தை உடையவன் நாராயணனின் அம்சமாகிய கண்ணபிரான்  அருள்  தருவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றான் அவனை நாம் புகழ்ந்து பாடுகையில் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்பதை அறிந்து அனைவரும் எம்மோடு சேர்ந்து நோன்பிருக்க வாரீரோ -என ஆண்டாள் அன்போடு அனைவரையும் அழைக்கின்ற அழைப்பு இதுவே.

சிறப்பு -4 ‌பாவையே கேளீரே.. இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் நினைத்துகொண்டு பாடுகிறாள்.. 'நாராயணனே பறை தருவான் 'என்ற வாசகம் 108 திருப்பதிகளிலே   108வது திருப்பதியான வைகுண்டத்தில் வசிக்கக்கூடிய நாராயணனை நினைத்து  -நாம் இந்த மார்கழி மாதத்தில் புண்ணிய தினங்களாக இந்த 30 நாட்களும் நினைத்து வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் முயற்சித்து  கிடைக்கும் ‌

  சிறப்பு- 5
  தினமும் ஒரு  திருப்பாவை இந்த பாடலை பக்தியோடு படித்து நல்ல சிந்தனைகளை மனதில் வைத்து நல்ல பாதையிலே நடந்து சென்றால்- செயலாற்றினால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனோடு கலந்து முக்தியை அடையலாம் என்பது திண்ணமே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்