சொந்தமான மனையிலே வீடு கட்டி சிறுகுடிலும்-பெருங்குடிலாக
அதிலே மனைவி மக்கள் அனைவரும் ஒருசேர ஆனந்தமாய் அங்குமிங்கும் பரபரக்க- அதை கண்டு பெருமிதம் கொள்பவனே- வீட்டின் பெருமகன் சிறந்த தலைமகன் எனும் பேறு பெற்றவன் ஆகின்றான்.
ஒரு வீடு நமக்கு சொந்தமாக அமைந்து விட்டால் மனதிலே ஒரு நிம்மதி.
வாழ்வில் நாம் சாதித்து விட்டோம் என ஆனந்தம்
அடுத்தவர் சொல்லுக்கு ஆளாகிய துயர் நீங்கப் பெற்ற ஒரு மகிழ்ச்சி .
நம் உழைப்பு வீண் போகவில்லை என ஏற்படும் இன்பம் .
நான் கட்டிய -எனது சொந்தமான- என் புதிய வீடு என சொல்வதில் ஒரு பெருமிதம் .
இப்படி என்னால் முடியுமா என யோசனை செய்யாது- முடியும் என நம்பிக்கையோடு நாம் செய்வதற்கான செவ்வாய் பரிகார வழிபாடு பற்றி அறியலாம் .
அதற்கு முன்பாக செவ்வாய் பலம் குறைந்து இருந்தால் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சில விஷயங்கள்..
சிலரது உழைப்பில் சேர்ந்த செல்வம் இருந்தும் -வீடு கட்டும் யோகம் தள்ளிப்போகும் .
சொந்தமாக மனை இருந்தாலும் வீடு கட்ட முடியாது.பல தடங்கல்கள் ஏற்படும்.
பூர்வீக சொத்து வரவேண்டியது கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்
அனைத்திற்கும் ஒரே காரணம -நம்முடைய ஜாதகத்தில் செவ்வாய் பலம்பெற்று இல்லாமல் இருப்பதே ..இதை பரிபூரணமாக நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை அறியலாம்..
செவ்வாய் பகவானுக்கு உகந்த கிழமை -செவ்வாய் கிழமை
செவ்வாய் பகவானுக்கு உகந்த மலர் செவ்வரளி -சிகப்பு வண்ண மலர்கள்.
செவ்வாய் பகவானுக்கு உகந்த பழம் செவ்வாழை .
செவ்வாய் பகவானுக்கு உகந்த அதிதேவதை முருகப்பெருமான்.
செவ்வாய் பகவானின் அருள்பெற உகந்த தலம் வைத்தீஸ்வரன் கோவில்.
வழிபடும் முறைகள் ..
வழிபாடு-1
காலை 6-7 மணி -செவ்வாய் ஓரையில் விளக்கேற்றி செவ்வரளி மலர்களால் அலங்கரித்து-செவ்வாழை- கற்கண்டு பால் வைத்து 'ஓம் அங்காரகாய நமஹ 'எனும் ஸ்லோகம் 108 முறை பாராயணம் செய்ய வேண்டும் . 9 வாரங்கள் தொடர்ந்து வழிபாடு நடத்துவது சிறப்பு.
வழிபாடு- 2
செவ்வாயின் அதிதேவதை முருகன் என்பதால் -ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகப்பெருமானின் கந்த சஷ்டி பாராயணம் - கந்தனின் புகழ் மாலைகள் படிக்க வேண்டும்.
வழிபாடு - 3
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று முதல் அபிஷேக பூஜையில் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அலங்கார தரிசனத்தை காண்பது சிறப்பு.
வழிபாடு -4
செவ்வாய்க்கிழமை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று சுயம்பு மூர்த்தியாக காட்சி தரும் சிவபெருமான்
வேண்டிய வரங்கள் அனைத்தும் கொடுப்பவன். ஓம் நமச்சிவாய எனும் மந்திரத்தை சொல்கையில் மனம் குளிர்பவன்- மனைவி என்பவள் தம்மோடு சரிபாதி என போதித்து- சிவ சக்தியாக காட்சி தருபவன் எம்பெருமானை தரிசித்து-
தனிசன்னதியில் சிறப்புமிக்க செவ்வாய் பகவானுக்கு அபிஷேகம் செய்து சிகப்பு நிற ஆடை அணிவித்து செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து "சொந்தமாக மனையில் வீடு கட்டும் பாக்கியத்தை அருள வேண்டும்-தம்மால் முடிந்த செப்பு பாத்திரம் தானம் செய்கிறேன்"என மனமுருக வேண்டி ஒன்பது முறை அங்கார பகவானை வலம் வர வேண்டும்.
செவ்வாய் பகவானுக்கு மிகவும் பிடித்தமான அதிதேவதையாக விளங்கும் முருகன் பெருமான் அங்கே முத்துக்குமாரசாமியாக காட்சி தருகிறார்.
முருகப்பெருமானையும் தரிசித்து வந்தால் நம்முடைய ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்று சொந்தமாக வீடு கட்டும் யோகம் உடனே கைகூடும் .
முருகன் அருளால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்கி -செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தை நம் ஜாதகத்தில் பெற்று வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.
சொந்தமாக வீடு கட்ட நினைப்போர் வாழ்விலே அதற்கான சாதகமான பலன்கள் அமைந்து -பூமி பாக்கியம் சகல நன்மைகளும் பெற்று
கனவு நினைவாகி வாழ்க்கையில் சிறப்பாக வாழ்வதற்கான ஒரு பரிகாரமே -இந்த செவ்வாய் பரிகார வழிபாடு வழிபட்டு வாழ்க்கையில் சிறப்பை அடையலாம் .


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்