திங்கள், 9 டிசம்பர், 2019

குழந்தை வரம் வேண்டி சஷ்டி வழிபாடு


குழந்தைை வரம் வேண்டி சஷ்டி வழிபாடு


1-6-2025  ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை சஷ்டி 


சட்டியில் இருந்தால் அகப்பையில் எனும் பழமொழியை நான் அடிக்கடி கேட்பது உண்டு..

'சஷ்டி திதியில் விரதம் இருந்தால் அகப்பையில்- அதாவது கருப்பையில் குழந்தை மலரும் 'என்பது பழங்காலத்தில் இருந்தே சொல்கின்ற ஒரு வாக்கு .அதுவும் மகா சஷ்டி அன்றைய தினத்திலே -தாமரை மலர் பூத்த தங்க முகத்தவனின்  அருளைப் பெற்றால் நிச்சயம் குழந்தை பிறக்கும். 

வைகாசி மாதம் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி அன்று கணவன் மனைவி இருவரும் ஒரே மனதோடு பயபக்தியோடு -உளம் உருகி குழந்தை வரம் கிடைக்க வேண்டி 'உமை போன்ற குழந்தை எமக்கு இல்லை எனில் -இந்த உலகத்தில் பிறந்து என்ன பயன் -முருகா! நினையே வேண்டி விரதம் இருந்து நின் அருளால்  பெறப் போகும் குழந்தையை  நீ குடி கொண்ட கோவிலாகிய திருச்செந்தூரில் குழந்தையின் முதல்முடியை காணிக்கையாக செலுத்துகிறேன்.. குமரா -கந்தா -கடம்பா -கதிர்வேலா வேலவா ' என முருகனின் பாதமே சாஷ்டாங்கமாக விழுந்து வேண்டி சரணடைந்தால்  -குழந்தை செல்வத்தைஉடனே  அருள்பவன் முருகப்பெருமான்.

குல தெய்வ கோவிலில் முதல் முடியை காணிக்கையாக கொடுப்பது -என்பது குல வழக்கம் என்றால் அதன்படியே செய்து அதற்கு அடுத்து முடிகாணிக்கை முருகனுக்கு அளிக்கலாம்.

விரதம் இருப்பதற்கான முறை...



 இருவரும் சேர்ந்து காலையில் இருந்து  மாலை வரை- பழம் பால் தண்ணீர் மட்டுமே ஆகாரமாக எடுத்துக் கொண்டு உள்ளம் உருகி வழிபட்டால் கேட்ட வரத்தை அளிப்பான் கந்தன் அவன்

 காலையும் மாலையும் விளக்கேற்றி கணவனும் மனைவியும் ஒருசேர அமர்ந்து கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வழிபட்டால்

அழகுக் குழந்தையாக -அறிவுஜீவியாக இளமை வளமாக - நீண்ட ஆயுள் கடாட்சத்தை பெற்ற ஒரு தெய்வீக குழந்தையாக நம்மிடத்தில் அளிப்பான் கார்த்திகேயன்.



அன்றைய தினத்தில் காலை அல்லது மாலையில் ஒரு முறையாவது கோவிலுக்குச் சென்று முருகப்பெருமானை தரிசித்து முறையான விரதத்தை கடைபிடித்தால் அடுத்த சஷ்டியிலே அழகான மழலையை  மடியிலே தவழ செய்வான் ஆறுமுகன்.

 வருத்தத்தை நீக்கி -துன்பத்தை போக்கி -துயர் துடைத்து மழலைச் செல்வத்தை அளிப்பான் வேலன் அவன்.

இதே விரதத்தை  ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய வளர்பிறை  சஷ்டி அன்றும் மேற்கொண்டு குழந்தை செல்வத்தை முருகப்பெருமானின் அருளால் பெறலாம்.


 வாழ்க்கையில் சின்னச் சின்ன துன்பங்கள் கூட ஏற்றுக்கொள்ள முடியாத மென்மையான மனம்  படைத்தவர்களாக நாம் இருக்க சோதனைகளை  மலையளவு கொடுத்து சோதித்துப் பார்ப்பதில் ஏனோ ஒரு ஆனந்தம் ‌‌‌ இறைவனுக்கு...




இந்த சஷ்டி  அன்று விரதமிருந்து உள்ளம் உருகி முருகப் பெருமானை வேண்டி வழிபடுவோருக்கு.. 
நம்முடைய துன்பங்கள் அனைத்தும் விலகி  நம்முடைய சோதனைகள் அனைத்தும் தவிடு பொடியாக்கி பனிபோல் விலகச் செய்து அருள்பாலிக்கின்றார்  வேல் கொண்டு வீற்றிருக்கும்  எம்பெருமான் முருகன் அவன்.

தொடர்ந்து ஐந்து சஷ்டிக்கு தம்பதிகள் சேர்ந்து காலையும் மாலையும் விளக்கேற்றி கந்தர் சஷ்டி  பாராயணம் செய்து விரதம் இருந்தால் - அதற்குள் முருகப் பெருமானின் அருளால் குழந்தை வரம் நிச்சயம் கிடைக்கும்.


இந்த குறை மட்டுமல்லாது வாழ்வில் எந்த குறை இருந்தாலும் முருகா சரணம் என்போர்க்கு சிந்தையில் தித்திக்கும் செய்தி பல அளித்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ செய்திடுவான் எம்பெருமான் குகன் என்பதால்
இந்த கந்த சஷ்டி அன்று -முறையாக விரதம் இருந்து -முருகப் பெருமானின் அருளை  பெற்று வாழ்க்கையில் சிறப்பை அடையலாம்.

சிறப்பான வாழ்க்கை பெறுவதற்கு கல்லுப்பு பரிகாரம் 🌹🍀🌹👇👇👇

https://balakshitha.blogspot.com/2020/01/blog-post_7.html


சொந்தமாக மனை வாங்கி ,வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு பத்துவிதமான தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசானில் மிண்னனு  புத்தகமாக படித்து பயன்பெறுங்கள்🙏🌹👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC



'இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ 'புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.

புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் அன்பளிப்பாக பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்
நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.


📞‌அணுகவும் 8124152666

💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐

https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2ds

Copy rights at Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்