வியாழன், 5 டிசம்பர், 2019

திருமணம் விரைவில் கைகூட பெருமாளின் அங்கவஸ்திரம் வழிபாடு



பெருமாளின் பட்டு வேஷ்டி அங்கவஸ்திரம் பரிகார வழிபாடு


 திருமணம் இளம் வயதில் நடக்கக்கூடிய ஒரு இனிதான வைபோகம்.. அது பல பேருக்கு சில தடைகள் காரணமாக தள்ளிக்கொண்டே போகும்.

 இதனால் மனமுடைந்து வாழ்க்கையில் விரக்தி அடைவோர் பலர்  உண்டு. அ


அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒருநாள் பரிகாரமே பெருமாளின் பட்டு வேஷ்டி அங்கவஸ்திரம் வழிபாடு

 ஜாதக கோளாறுகளை சரிசெய்து தெய்வத்தின் திருவருளை பெற்று  அடுத்த ஓரிரு மாதங்களில் இனிதே திருமணம் நிச்சயம் முடிந்து மனதில் மகிழ்ச்சி பிறக்கும்.


சொந்த வீடு மழை வாங்குவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு முறைகள் புத்தகமாக அமேசானில் படித்து பயன் பெறுக 🌹🌹🍀🌹🍀🌹👇👇👇👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

 அதற்கான வழிமுறை..

சிறப்பு 1  பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சாற்றகூடிய - பட்டு வேஷ்டி துண்டு ஐயரிடம் முன்பே சொல்லி வைத்து ...

தட்சணை கொடுத்து வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் வைக்க வேண்டும் .


வெள்ளிக்கிழமை நல்ல சுப நாளில்
 'தன் மகனுக்குதிருமணம் இனிதே ஆக வேண்டும் 'என மனதார பெற்றோர் வேண்டிக்கொண்டு -

பூஜைஅறையில் ஐந்து முக விளக்கேற்றி பட்டு வேஷ்டி அங்கவஸ்திரத்தை வைத்து- நன்றாக வேண்டிக்கொண்டு வாழ்த்தி மகனிடம் கொடுக்க-பெருமாளின் மேனியில் சாற்றிய
அங்க வஸ்திரத்தை அணிந்துகொண்டு மணமகன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்வது மிக சிறப்பு .


அர்ச்சனை செய்வதற்கான பொருள்கள்


தேங்காய்-வெற்றிலை பாக்கு வாழைப்பழம்- துளசி மாலை
புஷ்பத்தில்‌  ஏலக்காய் சேர்த்து கட்டிய
பூமாலை (நம்முடைய கையால் பூக்களை தொடுத்து ஏலக்காய் இடையிடையே ஊசியால்  கோர்த்து கட்டுவது மிக விசேஷம்)

ஏனென்றால் ஏலக்காய் மகாலட்சுமிக்கு மிகவும் உகந்த பொருள் -என்பதால் ஏலக்காய் சேர்ந்த புஷ்பத்தை பெருமாளுக்கு சாற்றும்பொழுது-பெருமாளின் மார்பினிலே வாசம் செய்யும் மகாலட்சுமியும்
அளவில்லாத ஆனந்தம் கொண்டு நாம் வேண்டும் வேண்டுதலை- மனம் குளிர நிறைவேற்றுவாள்-என்பது ஐதீகம்

 மூன்று பெருமாள் சன்னதிக்கு சென்று வருவது மிகவும் சிறப்பு.

பிறகு வீட்டிற்கு வந்தபிறகு அந்த பட்டு வேஷ்டி அங்கவஸ்திரத்தை மடித்து பத்திரமாக பூஜை அறையில் வைக்கலாம்.


இந்த வழிபாடு தொன்றுதொட்டு பெரியவர்கள் சொல்லுகின்ற மங்கள வழிபாடு .

இன்று வரை நடைமுறையில் இருந்து வரும் ஒரு வழிபாடு .



பெருமாளின் திருமேனியில் சாற்றிய  -பட்டு வேஷ்டி அங்கவஸ்திரம் மணமகன் அணிய -அந்த வஸ்திரத்தின் புனிதம் பட்டு தோஷங்கள் தடைகள் விலக திருமணம் விரைவில் கூடும்

இந்த பரிகாரத்தை சிறப்பான முறையில் செய்தால் அடுத்து உடனே திருமணம் நல்ல இடத்தில் நினைத்த இடத்தில் உடனே கைகூடும் .

 பெருமாளின் அருளால் திருமணம் இனிதாக நடந்து முடிந்த பிறகு
பெருமாளுக்கும் பத்மாவதி தாயாருக்கும் பட்டுடடை சாற்றி அதேமுறையில்அர்ச்சனை செய்து வேண்டுதலை நிறைவேற்றலாம்.

வாழ்க்கையில் விரக்தி நீங்கி மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை கிடைப்பதற்கு -அருமையான பரிகாரம் இந்த பட்டு வேஷ்டி அங்கவஸ்திரம் வழிபாடு.

 இதே முறையில் பெண்களுக்கும் திருமணம் கை கூட ..

பெருமாள் கோவிலுக்கு சென்று மகாலட்சுமியின் திருமேனியில் சாற்றிய புடவையை அய்யரிடம் தட்சணை கொடுத்து வாங்கிவந்து இதே முறையில் வழிபாடு செய்தால் பெண்களுக்கும் விரைவில் திருமணம் நடக்கும்.

சுப மாதங்களில் சுப நாளில் சுப நேரத்தில்  இந்த வேண்டுதலை நிறைவேற்றுவது உத்தமம்.

பெருமாளின் அனுக்கிரகத்தால் திருமண வைபோகம் சுபமாக வீட்டினில் நடந்தேற- அளவிலாத மகிழ்ச்சி குடும்பத்தில் அனைவரின் முகத்திலும் நிறைந்திட -ஆனந்தம் பெற்று சிறப்புடன் வாழ்ந்து வாழ்வின் பயனை அடைவோம்.

 Copy rights at balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்