பிரதோஷம் அன்று விரதம் இருக்கும் முறை
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனேபிரதோஷம் அன்று விரதம் இருக்கும் முறை..
அன்றைய தினத்திலே சிவபெருமானின் அருளை பெறுவதற்கு ஒரு யோகியின் தவத்தை உள்வாங்குவது மிக சிறப்பு.
ஒரு யோகியின் தவம் என்பது..
ஒரு நிமிடம் மனதை ஒடுக்க-2வது நிமிடம் ஈசனை நினைக்க- 3வதுநிமிடம் அவன் நாமம் ஓத -4வது நிமிடம் அகம்பாவம் மறைய- 5வது நிமிடம் ஆணவம் விலக ..
6வது நிமிடம் இறைவனை அகத்தில் இருத்தி-7வது நிமிடம் ஐந்து முக விளக்குகள் சுடர் விட்டு எரிய- எட்டாவது நிமிடம் கணீர் எனும் அமுதமான மணியோசை எழும்ப- 9வது நிமிடம் ஆராதனை அழகாக தெரிய..
10வது நிமிடம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்- இறந்து மடியும் இம்மனித பிறவியிலே ஆத்மாவை உன் வசம் ஆட்கொள்ள -கண்டு கொண்டேன் என் பெருமானே.
இது ஒரு யோகியின் தவம் அன்றோ!
அதே நேரத்தில் நாம் சொந்த பந்தத்தில் ஆட்கொண்டு- கவலைகள் பல கொண்டு -இன்பத்தில் இனிமைகண்டு -கடமையில் கண் கொண்டு -வாழ்கின்ற போதிலும்..
பிரதோஷ வேளையில் யோகியின் தவத்தை நாம் உள்வாங்கி -
ஈசனின் நாமம் தனை உயிர் என நினைத்து-
மனதாலும் உடலாலும் உண்மையாய் விரதம் இருந்து-
ஈசனை இரு கை கொண்டு வணங்கினால்...
பிரதோஷ வேளைகளில் கைலாயத்தில் மிக ஆனந்தமாக சிவன் சக்தியோடு சேர்ந்து சிவசக்தி கோலத்திலே நடனமாடி கொண்டிருக்கும் அற்புதமான தருணத்தில்..
நம்முடைய வேண்டுதல் அனைத்தையும் உடனே நிறைவேற்றுவான் என் பெருமான்.
பிரதோஷ நாளன்று விரதம் இருந்தால் ஏற்படும் சிறப்புகள்..
எம்பெருமான் நம் எண்ணங்களை புனிதப் படுத்துவான். நாம் காண்கின்ற காட்சிதனை மலர வைப்பான் -செல்வ கடாட்சத்தை அள்ளி கொடுத்திடுவான்- குடும்பம் மகிழ்வோடு இருப்பதற்கு அருள்புரிவான்.
எம் ஈசனின் பாதமே சரணம் சரணம் சரணம்.
கோபத்தை தணிக்க எம்பெருமான் முருகன் காட்டிய வழி
https://balakshitha.blogspot.com/2021/07/blog-post_28.html
திருமணத்திற்கு மாங்கல்யம் எந்தநாள் எப்படி யாரிடம் செய்வதற்கு கொடுக்க வேண்டும்
https://balakshitha.blogspot.com/2021/03/blog-post.htm
Copy rights at balakshitha



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்