புதன், 28 ஜூலை, 2021

சஷ்டி விரதம்

 கோபத்தை தணிக்க  எம்பெருமான் முருகன் காட்டிய வழி



பழனி மலையில் வீற்றிருக்கும் திருமுருகா -நின் உருவம் என் அகக்கண்ணில் என்றென்றும் நிறைந்திருக்கும் முருகையா -சூழ்ந்த இருள்நீக்கி எமை காத்து அருளிய வடிவேலா- நான் கண்ட இவ்வின்பம் வையகமும் கண்டுணர்ந்து ஆனந்தம் கொள்ள அருள் புரிவாய் ஓம் முருகா.

கோபம் என்பது நோய்க் கிருமி தொற்று என்றால் மிகையன்று.. கொரோனாவின்  தங்கை என்றும் பெயர் வைப்பதும் தவறன்று..

கோபம் ஏன் வருகின்றது !நமக்கு பிடிக்காத காரியம் , என மனம் சொல்கையில் கோபம் தொற்றுகின்றது- அதனால் நாவில் கடும்கோபம் எனும் கனல் வார்த்தை உதிர்கையிலே கொடிய நோய் அடுத்தவருக்கு தொற்றுகின்றது- என்பதும் பொய்யென்று .

உறவுகளை அழித்து -நம்மை தனிமைபடுத்தி  -மகிழ்ச்சியை குலைத்து - நிம்மதியை  தொலைத்து நம்மை படுக்கையில் தள்ளுவது கோபத்தில் வேலையன்றோ!!

கோபம் வரும்போது சாந்தமாக இருந்து விட்டால் காலம் கனிந்து அதற்கான விடை கிடைக்கும் என்பதில் உறுதி கொள்க.

சஷ்டி அன்று விரதம்  இருக்கக் கூடிய எளிமையான முறை🌹🍀🌹👇👇

https://balakshitha.blogspot.com/2019/10/blog-post_30.html

கந்தர் சஷ்டி கவசம் பிறந்த வரலாறு🙏🌹🍀🌹👇👇


மௌனம் கடைப்பிடித்தால் நல்ல வழி பிறக்கும் என்பதில் தெளிவு கொள்க.

அந்தக் கோபத்தை தணிப்பதற்கு எம்பெருமான் முருகனின் கை வசமுள்ள ஒரு கலை போதுமே! உவகையில்  மனம் மகிழ்வதற்கு அக்கலை‌  என்னவென்று நாம் காண்போம்..

எம்பெருமான் முருகன் அவன்-
அழகு முகத்தன் அவன்- ஆயிரம் கலைகளை கண்களில் சொல்பவன் வடிவேல் கொண்டு வீற்றிருக்கும் அழகன் அவன்.

நல்வழி பாதையில் நம்மை அழைத்து செல்பவன் அவனே அடிக்கடி கோபம் கொண்டு மலை மீது ஏறி காட்சி தரும் பொழுது- மனிதப் பிறவியில் பிறந்த நாம் மட்டும் விதிவிலக்கன்று!

என்றாலும் மலையின் மீது அமர்ந்த நொடியில் சாந்த சொரூபமாக காட்சி தருகின்றான்- அதற்கான பொருளையும் அவனே அருள்கின்றான்.


மனதிற்கும் மலை போன்று மாபெரும் சக்தி  உண்டு என்பதை மெய்ப்பிக்க மலையின் மீது காட்சி தருகிறான்.
மாபெரும் சக்தி கொண்ட உயர்ந்த மலை போன்ற நிலை கொண்டது மனம் என்று புரிய வைக்கின்றான்.



பசுமை- தென்றல்- ஊற்று- மகிழ்ச்சி குளிர்ச்சி - எழுச்சி என அனைத்தும் ஒத்த மாபெரும் அற்புத படைப்பே மனமும் மலையும் என தெளிவு கொடுக்கின்றான் .

பசுமை போன்ற எண்ணங்கள் கொண்ட மனதினிலே.. தென்றல் போன்ற  நினைவுகளை சுமந்த நம் மனதினிலே ...கள்ளிச்செடி போன்று துன்பங்கள் சூழ்ந்திருக்கும் மலை போல்  ஆங்காங்கே வரும் துன்பங்கள் கொண்ட மலை எனும்  நம் மனதினிலே - கோபம் வருகையில் முருகனை மனதினில்  நினைத்துவிட்டால்..

மலையின் மீது மிக அழகாக காட்சிதரும்  எம்பெருமான் நம் மனதிலும் கோபத்தை தணித்து சாந்தத்தை கொடுத்திடுவான்‌.

அப்பனுக்கே பாடம் சொன்ன எம்பெருமான் முருகன் அவன்‌.. ஞானத்தை புகட்டி நம் அறிவுக்கு  தெளிவு கொடுக்கும் கந்தன் அவன்.. கொடுக்கும் 

அறிவுரைகளோ -3

சிறப்பு -1 முருகனை மனதினில் இருத்தி கொண்டால்..

சிறப்பு- 2  'ஓம் சரவண பவ 'எனும் நாமத்தை நினைத்துக்கொண்டால்

சிறப்பு- 3 கந்தசஷ்டி தினந்தோறும் படித்து வந்தால்...

மகிழ்ச்சி நிறைந்த வாழ்வுதனை குளிர்ச்சி நிறைந்த சூழ்நிலையை உருவாக்கி -எழுச்சியான சீரும் சிறப்பும் கொண்ட வாழ்க்கையிலே..

மலையினிலே நெளிந்து வளைந்து ஓடும் ஓடை போல் உள்ள பாதையில் நம்மை அழைத்துச் சென்று , கடலில் சேரும் நதி போல -பரம்பொருள் எனும் கடலில் அழைத்து சென்று..

மோட்சம் எனும் கரை சேர்ப்பான் எம்பெருமான் முருகன் அவன் - ஒப்பிலா மாணிக்கமாய் சுடர் வீசி என் மனதினிலே என்றும் நிலைத்திருக்க அருள் புரிவாய் .

முருகா சரணம்- சரணம் -சரணம்
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

சொந்தமாக மனை வாங்கி ,வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு பத்துவிதமான தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசானில் மிண்னனு  புத்தகமாக படித்து பயன்பெறுங்கள்🙏🌹👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC



'இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ 'புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.

புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் அன்பளிப்பாக பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்
நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.


📞‌அணுகவும் 8124152666

💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐

https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2ds

Copy rights at Balakshitha


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக