ஆடி அமாவாசை
8-8-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆடி அமாவாசை
எளிமையான முறையில் விரதம் இருக்கும் முறை
அமாவாசை என்பது நம் முன்னோர்களை நினைத்து விரதம் இருக்கக்கூடிய நாள். நம் முன்னோர்களின் ஆசி, குல தெய்வத்தின் சக்தி -அனைத்தும் இந்த ஆடி அமாவாசை அன்று விரதம் இருந்தால் நமக்கு கிடைக்கும்.
எளிமையான முறையில் விரதம் இருப்பது எப்படி என்பதை காண்போம்...
8-8-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆடி அமாவாசை.
முதல் தினமாகிய சனிக்கிழமை அன்று இரவு முதல் விரதம் ஆரம்பிப்பது நல்லது.
சனிக்கிழமை இரவு மூதாதையரை நினைத்து மனதார நினைத்து எளிதில் எளிய சிற்றுண்டி எடுத்துக்கொள்ளலாம்.
மறுநாள் காலை ஸ்நானம் செய்தவுடன், சூரிய பகவானை வணங்க வேண்டும் .
பசுமாட்டிற்கு அகத்திக்கீரை கொடுங்கள். கால் படாத இடத்தில் எள்ளும் தண்ணீரும் தெளித்தால் மூதாதையர்களின் ஆசி முழுமையாக நமக்குக் கிடைக்கும் .
இவை அனைத்தும் காலையில் நாம் மிக மிக முக்கியமாக செய்ய வேண்டும்.
முடிந்தவரை 12 மணிக்குள் அதாவது 12 மணியிலிருந்து1.30 மணி வரை எமகண்டம் என்பதால் 12 மணிக்குள் விளக்கேற்றி வாழை இலை போட்டு படைத்து காகத்திற்கு சாதம் வைத்து விடுங்கள்.
வாழைக்காய் முருங்கைக்காய் பூசணி கீரை வகைகள் காய்கறி வகைகள் மிக முக்கியமாக சேர்த்துக்கொள்ளுங்கள். வடை பாயாசம் படைப்பது நல்லது.
நம் முன்னோருக்கு பிடித்தமான காய்கறிகள் வைத்தும் படைக்கலாம். அன்றைய தினத்தில் ஏதாவது ஒரு உயிரினத்திற்கும் கண்டிப்பாக அன்னமிட வேண்டும்.
கால பைரவரை வணங்குங்கள்
அன்றைய தினத்தில் காலபைரவரை வணங்குதல் மிகவும் நல்லது. கால பைரவரின் வாகனமான நாய்க்கு பிஸ்கட் வாங்கி கொடுக்கலாம் .
ஒரு ஏழைக்கு அன்னதானம் செய்யலாம். ஆடு மாடு போன்ற உயிரினங்களுக்கு அன்னம் கொடுக்கலாம்.
நம் முன்னோர்கள் ஆசி கிடைத்தால் நம்முடைய குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் .குலம் தழைக்கும். செல்வ சிறப்பு உண்டாகும். ஆரோக்கியமாக வாழ்வதற்கு கண்டிப்பாக முன்னோர் ஆசி தேவை .
மிக புனிதமான முன்னோர்களை நினைத்து வழிபடக்கூடிய இந்த சிறப்பான நாளில், முன்னோர்களை வேண்டி ஆடி அமாவாசையில் நிறைவோடு படைப்போம்.
சொந்தமாக மனை வாங்கி ,வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு பத்துவிதமான தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசானில் மிண்னனு புத்தகமாக படித்து பயன்பெறுங்கள்🙏🌹👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
Copy rights at Balakshitha

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்