சமையல் அறைக்கு தேவையான மிக முக்கிய பொருட்களை இன்றைய சமையல் வகுப்பறையில் தெரிந்துகொள்ளலாம்.
சமையலறை பார்ப்பதற்கு மிக அழகாக தெரிய வேண்டுமென்றால் அதற்கு தேவையில்லாத பொருட்களை தவிர்க்க வேண்டும் .தேவையான பொருட்களை வைக்க வேண்டும்.
நம்முடைய சமையலறையில் வடிவத்தை மனதில் உருவாக்குங்கள். இந்தப் பொருள் இந்த இடத்தில்தான் இருக்க வேண்டும் -என்பது வரைமுறை ..இந்த வரைமுறைப்படி வரிசைப் படுத்திக் கொள்ளுங்கள்.
வரிசை படுத்தும் முறை
1-கேஸ் அடுப்பு
2-மிக்ஸி
3-கிரைண்டர்
4 - பாத்திரம் அடுக்குவதற்கான செல்ஃப்
5 - மளிகை பொருட்கள் அடுக்குவதற்கான செல்ஃப்
6-பாத்திரம் கழுவி வைப்பதற்கான பாத்திர ஸ்டாண்ட்.
7- கழுவ வேண்டிய பாத்திரங்கள் சிதறாது ஒரே இடத்தில் போடுவதற்கு ஒரு பெரிய பக்கெட்
8-தட்டு வைப்பதற்கான ஸ்டாண்ட்
9 -டம்ளர் வைப்பதற்கானஸ்டாண்ட்
10-கரண்டி ஸ்பூன் ஸ்டான்ட்
இந்த முறைகளில் கிச்சனை பயன்படுத்தினால் நாம் நேரத்தை மிச்சப்படுத்தலாம் .டென்ஷன் இல்லாமல் சமைக்கலாம்.
இந்த பொருட்களை தவிர தேவையில்லாத மற்ற பொருட்களை சமையல் அறையில் இருந்து தவிர்த்து விடுங்கள் .
கேஸ் அடுப்பை -கரண்ட் பாக்ஸ் அருகில் வைக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.
செல்ஃபில் பாத்திரங்கள் ஒரு முறை வரிசை படுத்தினால் -அதே முறையில் மாற்றாது அழகாக அடுக்கி வையுங்கள் .
மளிகை பொருட்கள் மிக அழகாக ஒரு முறை வரிசை படுத்தினால்- அதே முறையில் அடுக்கி வையுங்கள்.
இந்த இரண்டு முறைகளும் நம்முடைய கிச்சனில் முறைப்படி கையாள்வதில் மிக மிக அழகை தரும்.
சிங்தொட்டியை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருங்கள்.
சுத்தம் செய்வதற்கு ஹோம் க்ளீனிங்டிஷ்வாஷ் சொல்யூஷனோடு வினிகரை பயன்படுத்துங்கள். பூச்சுக்கள் எதுவும் அண்டாது .உங்கள் சமையலறை எப்போதும் நறுமணத்தோடு இருக்கும்.
கிச்சன் சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை
பாத்திரங்களை கழுவி பாத்திர ஸ்டாண்டில் கவிழ்த்து வைக்கும்பொழுது -அடியிலே ஒரு கனமான டவல் வைத்து விடுதல் நல்லது .
கவிழ்ந்த பாத்திரங்களில் வடியும் தண்ணீர் -கிச்சனில் சிதறாது ..அந்த டவல் நீரை உறிந்துகொள்ளும்.
இரவு படுக்கப்போகும் முன் பாத்திரங்களை உரிய இடத்தில் பிரித்து வைத்து விடுங்கள்.
இந்த முறைகளை முறைப்படி கையாள்வதில் கவனமாக இருங்கள்
உங்களுடைய சமையலறை உங்களின் கையில் தான் உள்ளது.
என்னுடைய அனைத்து சமையல் குறிப்புகளையும் குறித்துக்கொண்டு அதன்படி சமையலறையை கையாளுங்கள் .
உங்களுடைய சமையலறை எப்போதும் புத்தம் புது பொலிவுடன் காட்சி தரும்.
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக