வியாழன், 9 ஏப்ரல், 2020

கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு எடுத்துக்கொள்ள ஜூஸ்



நம் குடும்பத்திற்காக நாம் உழைக்கின்றோம் ஒருநாள் சோர்ந்து படுத்தால் கூட எல்லா வேலைகளும் அப்படியே நின்று விட்டால் நமக்கு தெரியும். 'இந்த வீட்டை கிளீன் பண்ணனும் -சமைக்கணும் -வீட்டில் உள்ளவர்களை கவனிக்க வேண்டும்' எனும் பல கவலைகள் ..


'எப்பொழுது உடம்பு சரியாகும்- அதற்கு என்ன செய்யலாம்- என்ன மாத்திரை போட்டு சரிசெய்யலாம்' என்று யோசிப்போம் .


அது மேலும் உடலுக்கு கெடுதல் என்று தெரிந்தாலும் தற்சமயம் நிவாரணத்திற்கு அவசியம் என போட்டுக் கொள்வோம். அதனால் வரும் பின்விளைவுகளை பற்றி நாம் கவலைப்படுவதில்லை.

 எப்பொழுதுமே நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே- நாம் நம்முடைய உடலை சரி செய்து கொள்ளலாம் -என்பதை தெரிந்து கொள்வோம்.

 உடலை பராமரிக்க வாரம் ஒரு முறை எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுப் பொருட்களுக்கான வார அட்டவணை


1- எலுமிச்சை பழ ஜூஸ்


எலுமிச்சை பழச்சாற்றுடன்  ஒரு துண்டு இஞ்சி சாறு- தேன் கலந்து குடிக்கலாம் .இதனால் ஏற்படும் பலன்கள்..

ரத்தத்தை சுத்தப்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி  கொடுக்கும். பித்தம் -களைப்பு -சோர்வு என அனைத்தும் நீங்கி புத்துணர்ச்சி கொடுக்கும் .



வயிற்றுக் கோளாறுகள்- வாய்வுத் தொல்லை  - செரிமான பிரச்சனை அனைத்திலும் இருந்து நிவாரணம் பெறலாம்.


உடல் நலமாக இருந்தால் மனம் நலமாக இருக்கும் -மனம் நலமாக இருந்தால் சுறுசுறுப்பு தானாக வரும். சுறுசுறுப்பும் தானாக வந்தால் அனைத்திலும் வெற்றி காண வேண்டும் எனும் ஆவல் பிறக்கும். ஆவல் பிறந்துவிட்டால் வாழ்க்கையில் வெற்றி என்றும் நிச்சயமே.


 ஆதலால் உடல் நலத்தைப் பேணிக் காத்து வாழ்க்கையில் வளத்தைக் கண்டு- என்றென்றும் சிறப்பை அடையலாம்.

சமூக விலகல் உள்ள தனித்திருக்கும் இந்த சூழலில் -சுடுதண்ணீர் எப்பொழுதும் குடிப்பது நல்லது. வெதுவெதுப்பான சுடுநீரில் எலுமிச்சை பழ ஜூஸ் எடுத்துக்கொள்ளவும்.
.

ராஜகனி என அழைக்கப்படும் எலுமிச்சை பழத்தில்  இஞ்சியும் தேனும் சேர்த்து பருகி வர வெயில் காலத்தில்  தப்பித்து கொள்ளலாம்.
நாவின் சுவை யறிந்து நோய் நொடி
பித்தமெனும் களைப்பொடு
சோர்விடுத்து புத்துணர்ச்சிபெற்று பொலிவோடுவாழ் வாங்கும்
வாழ்வினரே.

Copyrights at balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்