திங்கள், 29 ஜூன், 2020

திருக்கருகாவூர் கர்ப்ப ரட்சாம்பிகை அம்மையின் மகத்துவம்



திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவில்

குழந்தை வரம் வேண்டும் .அந்த வரம் கிடைத்து- கரு கலையாது நிலைக்க வேண்டும். அந்தக் கரு கனிந்து சுகப்பிரசவம் நடக்க வேண்டும்- என நினைப்போர் அனைவரும் மனமுருக வேண்டி வழிபட வேண்டிய அற்புத தலம் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை .


கோவில் திருத்தலம் திருக்கருகாவூர் திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது.

கும்பகோணத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள- இந்த திருத்தலத்தில் தல மூர்த்தியாக முல்லைவனநாதர் புற்று மண்ணால் ஆன சுயம்பு வடிவில் காட்சி தருகிறார்.

அந்த திருத்தலத்திலே அம்மை கற்பரட்சாம்பிகை மிக அழகாக வீற்றிருக்கின்றாள்.


கர்ப்பரட்சாம்பிகை வரலாறு..


 அழகான முல்லைவனம் -ஏழ்மையான தம்பதியர்  -வேதியை- நித்துருவர்

 அன்பு எனும் அழகான குடில்
கட்டி - பாசம் எனும் நிழலில் பரிவுகளை பரிமாறி ஒருவரை ஒருவர் மனம் கோணாது -புரிதல் எனும் இலக்கணம் கண்டு வாழ்ந்து வந்தனர்.

 ஆயினும் ஒரு கவலை ! குழந்தைபேறு காணாது துளிர்த்த துன்பம் தனை வெளிக்காட்டாது வாழ்ந்து வந்தனர் தம்பதியர் .

வறுமை எனும் துன்பத்தை விட கொடியதன்றோ.. மழலைமொழி காணாத வாழ்வுதனை நினைக்க நினைக்க அவர் காணா வண்ணம் இவளுமாய்- இவள் காணா வண்ணம் அவருமாய்  கண்களை துடைப்பது வாடிக்கையாகவே ஆனது .


முல்லை வனத்தில் ஒரு அழகிய அம்மை எழுந்தருளி வீற்றிருக்க- அந்த இறைவியை தினமும் மனமுருக வேண்டி வர..கருவுற்றாள் வேதிகை.

கனவுகள் பல காண்கின்றாள் ஆனந்தமாய் கண்ட கனவுகள் அனைத்தும் அரை நிமிடத்தில் காணாமல் போனது.

 ஊர்த்துவ பாதர் எனும் முனிவர் வந்து பிச்சை கேட்க- கருவுற்றிருந்த வேதிகை எழுந்திருக்க முடியாது சில நிமிடம் தடுமாற- நிலை தெரியாத முனிவரோ இட்டார் ஒரு சாபம்..
அலறுகின்றாள் வேதிகை ..

பக்தையின்  குரல் கேட்டு ஓடி வருகின்றாள் அம்மை அவள். கலைந்த கருவினை ஒரு குடத்தினுள் வைக்கின்றாள் . குழந்தை அழகாக உருவானது.

 உருவாய் மலராய் கனியமுதாய் மலர்ந்த குழந்தையை அம்மையிடம் ஒப்படைக்கிறாள்.அந்த தலத்திலேயே வேதிகையின்  வேண்டுதலுக்கு இணங்கி அமர்கின்றாள் .இன்றும் வீற்றிருக்கின்றாள்.


 குழந்தை வரம் வேண்டி போவோர் அனைவருக்கும் - மனம் இனிக்க இனிக்க குழந்தை வரம் அருள்கின்றாள்.

குழந்தை செல்வம் பெற குலதெய்வ வழிபாடு🌹🙏🌹🍀🌹👇👇👇👇👇
http://balakshitha.blogspot.com/2019/03/blog-post_25.html

 வெளியே செல்ல முடியாத இந்த சூழலில் -வீட்டில் இருந்தவாறே குழந்தை வரம் வேண்டி திருக்கருகாவூர் அம்மையை வேண்டி வந்தால் நினைத்த காரியத்தை ஜெயமாக  திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை .


திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மையின் படத்தினை பிரின்ட் அவுட் எடுத்து பூஜை அறையில் வைத்து செவ்வாய்தோறும் 2 நெய் தீபம் ஏற்றி
வடக்கு நோக்கி அமர்ந்து
' ஓம்  கர்ப்பரட்சாம்பிகை போற்றி' எனும் 108 போற்றி பாடலை தொடர்ந்து -ஒன்பது வாரங்கள் வேண்டி வழிபட்டால் அம்மை அவள் மனம் கரைந்து குழந்தை வரத்தினை அருள்வாள்.

சொந்த மனை அமைய விரும்புவோர் அமேசான் கீழ்க்காணும் மின்னணு புத்தகத்தை டவுன்லோட் செய்து  10 அற்புதமான வழிபாட்டு முறைகளை படித்து பயன் பெறலாம்🙏🍀🌹🍀👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

அம்மையிடம் நம் வேண்டுதலை வைத்து -மனம் உருகி வேண்டி

கனிந்த மழலைதனை  கண்ணை இமைபோல் காத்து - நற்பண்பு எனும் தேனூட்டி திகட்டாத செல்வமென வளர்த்து  உலகம் போற்றும் உத்தமனாய் உருவாக்கி -அவ் இன்பம் கண்டு வாழ்ந்த பயனை அடைந்து -வாழையடி வாழையாக வாழிய வாழிய சிறப்புற வாழியவே.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
Copy rights at balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக