ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

உடல் பிணி தீர்க்கும் இஞ்சியை பயன்படுத்தும் முறை

இஞ்சியின் பயன்கள் ..



இல்லத்தில் வீட்டு வைத்தியத்தில் இஞ்சி எந்த வகையில் பயன்படுகிறது என்பதை பார்ப்போம்..

உடலில் நோய் இருந்தால் மன உளைச்சல் உண்டாகி சோர்வு வருவது என்பது உண்மை. ..எல்லா பிணிகளுக்கும் ஒவ்வொரு தீர்வு உண்டு..


 அனைத்து விதமான நோய்களுக்கும் ஒரு அருமருந்தாக இஞ்சி பயனளிக்கும்.

நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்ந்துபயன் அடைவதற்கு வீட்டிலேயே   நிறைய மூலிகை பொருட்களை போன்ற அற்புதமான பொருட்கள் பல உண்டு..

 அதில் மிகவும் முக்கியமானது இஞ்சி. இஞ்சியின் பயன் அனைவரும் அறிந்து கொண்டால் - உடலிலுள்ள அனைத்து பிணிகளையும் போக்கிக் கொள்ளலாம் .

இஞ்சியின் கார சுவையானது உடல் நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உதவுகின்றது.

தினமும் ஏதாவது ஒரு வகையில் இஞ்சியை சேர்த்துக் கொண்டு வாழ்வில் பயன் பெறுங்கள் இஞ்சி  எந்த விதத்தில் தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.. என்பதில் உள்ள விளக்கத்தைக் காண்போம்.

இஞ்சி- இல்லா இல்லத்தரசி வீடு இனிமை காணா.. என்பதை புரிந்து இஞ்சியின் மகிமை தனை அறிந்து கொள்வோம்.


 இஞ்சி பூண்டு விழுது -எல்லா பதார்த்தத்தின் கூட்டு பொரியல் குழம்பு வகைகள் அசைவ வகைகள் அனைத்திலும்  சேர்த்து நோய்நொடி பிணி அகன்று உடல்ஆரோக்கியம் பெருக.



 தினம் இஞ்சி சாறு அரை டீஸ்பூன் தேன் ஒரு டீஸ்பூன் கலந்து குடித்து வர சளி- ஜலதோஷம்- கபம் -பித்தம் மயக்கம் அனைத்திற்கும் விடை கொடுக்க‌..

 இஞ்சி சுக்கு ஆகி அதனை நெருப்பில் சுட்டு கரியாக்கி- தட்டில் வைத்து அச்சாம்பலை தேனில் குழைத்து நாவினிலே 48 நாள் தொடர்ந்து தடவி வர..

 ஜலதோஷம்- அடுக்குத் தும்மல் தொண்டை கமறல்- ஆஸ்துமா அனைத்தும் பறந்து ஓடிவிடும் என்பதை அறிந்து கொள்க.

நன்றாக உமிழ்நீர் வரும்வரை வைத்திருந்து அதன் பிறகு உமிழ் நீரோடு சேர்த்து விழுங்கினால்   நல்ல பலனைத் தரும். 

 இஞ்சி தட்டி பாலில் சேர்த்து பிடித்து இருந்தால் டீத்தூளும் அதில்  கலந்து தினம் பருக.. தினம் உடல் புத்துணர்ச்சி பெற்று திங்கள் வளம் போல நம் உடல் வளம் காணும் நிலை மனம் அறிந்திருந்திடுமே..

 இஞ்சி சீவலோடு  முழு உளுந்து காய்ந்த மிளகாய் சிறிது புதினா சேர்த்து -நல்லெண்ணெயில் வதக்கி
சிறிது  புளி உப்பு வெல்லம் கலந்து அரைத்த துவையலில் நோய் தீர்க்கும் மருந்தாக தினம் அரை டீஸ்பூன் எடுத்து வர வயிற்று உபாதைகள் அனைத்திற்கும் நல்ல தீர்வு காணலாம்.

இஞ்சி நல்லெண்ணெயில் இஞ்சி தட்டி போட்டு சிறிது பால் தனை சேர்த்து சுண்ட காய்ச்சிய வாசனையோ  வீடு முழுதும் கமகமக்க ..

அந்த எண்ணெயை வாரம் ஒருமுறை தலை குளிக்க ..அடிக்கடி உடல் சூடு தணியும் .தலைவலி சம்பந்தப்பட்ட அனைத்தும் பறந்தோடும்.

 இஞ்சி மணம் வீசும் இல்லம் -நோய் நொடி பிணி யல்லா மணம் வீசும் இன்று என் அருமை தெரிந்து அதனுடைய பயனை புரிந்து வாழ்வியல் நோய்நொடி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து பயன்பெறுவோம்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹



ஒன்றல்ல -ஓராயிரம் கவலைகள் நாமே இழுத்துப் போட்டுக் கொள்கின்றோம். இந்த கவலைகள் அனைத்தும் மறந்து மன அமைதி வேண்டும் என்று விரும்புவோர் புத்தகம் படிப்பது நாட்டம் கொள்க. ரிலாக்ஸ்சேஷன் எனக்கூடிய மனதை  அமைதி படுத்தி கொள்ள தினமும் 10 நிமிடமாவது ஆன்மிக கதை வரலாறுகளை தெரிந்து அறிந்து நம் குழந்தைகளுக்கு சொல்லிக்  கொடுத்து பலருக்கு பகிர்ந்து நம்முடைய எண்ணங்களை விரிவுபடுத்த ஏற்ற அருமையான தலம்தான் அமேசான் kdp யில் இணைந்து கொள்க.


 பாலாக்க்ஷிதாவின் கீழ்காணும் இந்த புத்தகங்களை படித்து பயன்பெறலாம்.

குழந்தைகளுக்கு ஞானம் விநாயகரின்பெறுவதற்கான  மிக அரிதான தெய்வீக குறிப்புகள் வரலாறுகள்...🙏🌹🍀🌹🍀👇👇👇👇
https://www.amazon.in/dp/B07VQVTX2N/ref=cm_sw_em_r_mt_dp_U_kbSTEbPX7YJST

விரைவில் திருமணம்  நடக்க அதற்கான பரிகாரங்கள் 🌹🍀🌹🍀👇👇👇👇
https://amzn.in/ibYVUJD

 சொந்தமாக  வீடு மனை அமைய அதற்கான தெய்வீக வழிபாடுகள் பரிகார ஸ்தலங்கள்🙏🌹🍀🌹🍀🌹👇👇👇👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

Copy rights at balakshitha







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக