திங்கள், 17 ஆகஸ்ட், 2020

செல்வம் வீட்டினில் நிறைந்திட மகாலட்சுமி வழிபாடு

   செல்வம் வீட்டினில் நிறைந்திட மகாலட்சுமி வழிபாடு   


வெளியேசெல்ல முடியாத இந்த சூழலில் பணத்தட்டுப்பாடு என்பது வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சந்திக்கும்  சூழ்நிலையில் நாம் அனைவரும் இருக்கின்றோம்.


நாம் குடும்பத்தை வழிநடத்த தேவையான செல்வத்தை கொடுக்குமாறு தெய்வத்தை வேண்டி வழிபடும்போது நமக்கு செல்வம் கிடைப்பதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகும்.


தெய்வத்திற்கு உகந்த பொருட்களை வைத்து மனம் உருக வேண்டும் பொழுது நினைத்த காரியங்கள் இனிதாக நிறைவேறும் .


 நம்மால் முடிந்த பொருட்கள் நம் கையில் இருந்தாலும் உள்ளன்போடு தெய்வத்திற்கு சாற்றும் போது செல்வ செழிப்பு உண்டாகி அந்த காரியம் இனிதாக ஜெயமாகும்.


மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமானது.. கல்லுப்பு தீபம் ஏற்றுதல் .வெண்மையான மணம் கொண்ட மல்லிகைப்பூ மாலை மற்றும் உதிரிப்பூக்களால் 

மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்தல் .

வழிபடும் முறையை பற்றி அறியலாம்..

எந்த ஒரு வேண்டுதல் வைத்தாலும் வெள்ளிக்கிழமையில் அந்த விரதத்தை மேற்கொள்வது சிறப்பு.


மகாலட்சுமி கல்லுப்பிலே வாசம் செய்கின்றாள் என்பது ஐதீகம். அவளுக்கு மிகவும் பிடித்தமானதுக  கல்உப்பு. அந்த உப்பினில் தீபம் ஏற்றும் பொழுது நம்முடைய துன்பங்கள் அனைத்தும் விலகி எதிர்மறை சக்திகள் மறைந்து செல்வம் சேர்வதற்கான அனைத்து பலன்களும் உண்டாகும் என்பதால் வெள்ளிக்கிழமை தோறும் கல்உப்பில் அகல் விளக்கு தீபம் ஏற்றி வைக்கவும். 


மகாலட்சுமியின் அருள் மட்டுமல்லாது குபேரனின்  ஆசி கிடைத்திட                       திிி வேண்டிய மிக முக்கியமான வழிபாடு காலை சுக்கிர ஓரையில்  படைப்பது சிறப்பு.


 வெண்மையான மலரான மல்லிகைப்பூ உதிரி மலர்கள் கைகளில் வைத்துக்கொண்டு அர்ச்சனை செய்வது செல்வம் சேர்வதற்கு உண்டான பலன் அதிகமாக கிடைக்கும்.

மல்லிகைப்பூ

பால்

 கற்கண்டு

 வாழைப்பழம்

 தேங்காய்

 உங்கள் மனதில் ஒரு  வேண்டுதல் தோன்றினால் அது நிறைவேற தெய்வத்தை நாடுகின்றோம் தெய்வத்தின் அருள் பெற்றால் மட்டுமே அந்த காரியம் கைகூடும் .


மகாலட்சுமிக்கு பிடித்தமான வெண்மையான மல்லிகைப்பூ- பால் கற்கண்டு -வாழைப்பழம்- தேங்காய் இந்த ஐந்து பொருட்களும் மகாலட்சுமிக்கு சாற்றி படைக்கும்போது செல்வங்கள் சேர்வதற்கான அனைத்து பலன்களும் பெற்று நினைத்த காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும்.

 மல்லிகையின் வாசம் போன்று குடும்பம் திகழ்வதற்கு செல்வத்தின் வாசம் நிறைந்து - நோய்நொடிகள் தீர்வதற்கு குடும்ப விருத்தி உண்டாக -வாழ்வினில் தெளிவு கிடைக்க- இனிதான வாழ்க்கை அமைய நாம் செய்யக்கூடிய மகாலட்சுமி வழிபாடு..

செல்வ செழிப்பு உண்டாகி குடும்பம் சுபிட்சம் பெற -கல்லுப்பு தீப வழிபாடு🌹🍀🌹🍀🌹👇👇👇👇👇https://balakshitha.blogspot.com/2020/01/blog-post_7.html

வெள்ளிதோறும் பூஜை அறையில் சுத்தம் செய்து மலர்களால் அலங்காரம் செய்தல்.. படைப்பதற்கு முன்பாக ஐந்து முக விளக்கை ஏற்றிக்கொள்ளவும் .

ஒரு பித்தளை தட்டிலோ அல்லது வெள்ளிதட்டிலோ  உதிரி மல்லிகைப்பூக்களை வைக்கவும்


 மல்லிகை மலர்கள் கொண்ட உதிரிப்பூக்கள் கைநிறைய அள்ளிக்கொண்டு வடக்கு நோக்கி அமர்ந்து 'ஓம் மகாலட்சுமியே போற்றி' என 108 முறை சொல்லி அந்த பூக்களால் பூஜை அறையில் தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்துவர..

 நம்முடைய துன்பங்கள் அனைத்தும் படிப்படியாக விலகும். நினைத்த எண்ணங்கள் அனைத்தும் முழுமையாக நிறைவேறும் .  

நம்முடைய வேண்டுதல் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்பட்டால்- தெய்வத்தை குறை சொல்வதோ நம்பிக்கை குறைவதோ எக்காரணம் கொண்டும் அந்த செயலை செய்யாதீர்கள். 


 நம்முடைய விதிப்பயன் படிதான் இந்த மனிதப் பிறவி இயங்குகின்றது. உடல் என்பது ஒரு மாயை ..நம் மனம் ஆன்மாவை கொண்டு -நாம் தெய்வத்தின் அருகில் செல்ல செல்ல நம்முடைய துன்பங்களின் கணக்கு படிப்படியாக குறைகின்றது ..பெரிய துன்பங்கள் கரைப்பதற்கான ஒரு படிக்கட்டே தெய்வீக பக்தி என்பதாகும் .


அனுபவிக்கும் பயன் என்பது விதி- அந்த விதியின் வீரியத்தை குறைத்து  கடுகளவு துன்பமாக மாற்றி  நினைத்த காரியம் ஜெயமாக்கும் சக்தி இறைவனுக்கு  உண்டு என்பதை முழுமையாக உணருங்கள்.

வெள்ளி தோறும் தவறாது மல்லிகை பூவால் அர்ச்சனை செய்து அவள் அருளைப் பெற்று செல்வச் செழிப்போடு வாழ்ந்து சீரும் சிறப்பும் பெற்று திங்கள் போல் திகட்டாத வாழ்வுதனை அடைந்து வாழ்ந்த பயனை அடைவோம்.

இதையும் படிக்கலாம் ..மனம் ஒத்து தம்பதிகள் வாழ்வதற்கு செய்யக்கூடிய வழிபாடு 🌹🍀🌹🍀👇👇👇👇👇https://balakshitha.blogspot.com/2020/07/blog-post_26.html

திருமணம் விரைவில் நடைபெற அதற்கான பரிகாரங்கள் மின்னணு புத்தகமாக அமேசானில் படித்து பயன் பெறுக 🙏🌹🙏🌹🍀🌹👇 👇👇👇https://amzn.in/ibYVUJD

Copy rights at balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக