வாழை மரத்தின் சிறப்ப
ஒரு வீட்டில் வாழை ,முருங்கை, தென்னை மூன்றும் இருந்தால் முனை தெரு கடைக்கு போக வேண்டிய அவசியம் இராது .
மூட்டுவலி ,கால்வலி ,நோய் நொடி பிணி இலாது மூலிகை செடியாக -முன்னோர் சொன்ன வாக்காக தெய்வத்திற்கும் உகந்த பொருளாக போற்றப்படும் மூலிகை மரங்கள் இந்த மரங்கள் என்பதால் பல பயன்கள் உண்டு .
அதில் மிக முக்கியமாக தெய்வீக மரம் எனும் வாழையின் மகத்துவத்தை பார்ப்போம்..
வாழைமரத்தில் வாழையடி வாழையாக பூத்துக்குலுங்கும் வாழைத்தண்டு வாழைக்காய் ,வாழைப்பூ, வாழைப்பழம் வாழை இலை அனைத்தும் நம் உடல் நலத்திற்கு மட்டுமன்றி வம்சம் தழைக்க குலம் தழைக்க ..எதிர்மறை சக்திகள் மறைந்து நேர்மறை சக்திகள் உருவாக வீட்டில் இடம் இருந்தால் கண்டிப்பாக வாழை மரம் வீட்டில் வைக்கலாம் .
நினைத்த காரியம் வெற்றி பெற
அப்படி வைக்க வசதி இல்லை என்றாலும் கவலை வேண்டாம் . சில சந்தர்ப்பங்களில் வாழைமரம் அருகில் நீங்கள் நிற்கும் படியான சூழ்நிலை கண்டிப்பாக வரும் . அந்த நேரம் நிச்சயமாக இதை செய்யுங்கள். வாழை மரத்தை இரு கைகளாலும் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்ளுங்கள். கைகளால் வாழை மரத்தை தொட்டவாறு 5 நிமிடம் ஆத்மார்த்தமாக தெய்வத்தை நினையுங்கள் .
மூன்று முறை நினைத்த காரியத்தை மனதில் சொல்லிக் கொள்ளுங்கள் திருமணம் நடக்க வேண்டுமா! .பணம் பிரச்சனை உண்டா.. செல்வம் வேண்டுமா வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையா .. மனக்குழப்பங்கள் தீரவேண்டுமா !அனைத்தையும் ஆத்மார்த்தமாக சொல்லுங்கள்.
எதிர்பார்த்த நல்ல எண்ணங்கள் ஆசைகள் அனைத்தும் கூடிய விரைவில் நிறைவேற வேண்டும். வாழையடி வாழையாக வம்சம் தழைக்க வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள்.
அன்றாட வாழ்வில் அமைதி காண சின்னச்சின்ன தானங்கள் செய்கின்ற முறை🌹🍀🌹👇👇👇
https://balakshitha.blogspot.com/2020/09/blog-post_26.html
நினைத்தது நிறைவேறும் .தெய்வ சக்தி நிரம்பிய வாழையின் மகத்துவத்தை நீங்களே உணர்வீர்கள் .
உயிரைக் காக்கும் வாழை
ஆணின் ஜாதகத்தில் நடக்கப்போகும் திருமண பந்தத்தில் இரு தாரம் என்று இருக்குமானால்.. முதலில் திருமணமாகும் பெண்ணிற்கு ஏதாவது ஒரு விதத்தில் ஆபத்து நேரிடும்.
அந்த பெண் தன் உயிரை இழக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். மற்றொரு பெண் அந்த ஆணின் கரத்தை பிடிக்கின்றாள். இரண்டாவது தாலி கட்டுகின்ற ஜாதக அமைப்பு இருத்துவிட்டால் அதை மாற்ற முடியாது .
அந்த காலத்தில் பெரியவர்கள் ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்ற மிக அற்புதமான இந்த வழிபாட்டை செய்வார்கள் .
ஒரு பெண்ணின் உயிரை காக்கும் சக்தி வாழைக்கு உண்டு.
வாழைமரம் பெண்ணுக்கு ஒப்பாவாள். நெஞ்சிலே ஈரத்தன்மை கொண்டவள். தன் உயிரை மனமுவந்து கொடுத்து காப்பாற்றுகிறாள். ஜாதகத்தில் இரு தாரம் என்று சொல்ல பட்ட மணமகன்வீட்டில் திருமணம் ஏற்பாடுகள் செய்து -மணமகனை அமரவைத்து பக்கத்தில் வாழை கன்று வைத்து மஞ்சள் பூசி குங்குமம் வைத்து -மணமகளாக பாவித்து ..
அனைத்து திருமண சடங்குகளும் செய்து மணமகன் கையால் தாலியை வாழை மரத்திற்கு கட்ட செய்வர். பிறகு ஒரு கத்தியால் மரத்தை வெட்டி சாய்ப்பர். முதல் தாலியை ஏற்ற வாழையோ ..
மகிழ்ச்சியோடு 'என் உயிரை தானம் செய்கிறேன். இனி வரும் பெண்ணானவள் நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியோடு தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள் 'என்று வாழ்த்து கூறுகின்ற தெய்வீக மரமே வாழை மரம்.
ஈகைக்கு வாழை மரத்தை உதாரணமாக சொல்வதுண்டு . மங்கல மனம் கொண்டவள் .குலத்தை வாழ செய்பவள் .தன்னுயிர் கொடுத்து ஒரு உயிரையே காப்பவள். ஈகைக்கு ஒப்பானவள். குலதெய்வம் தெரியாதவர்கள் தங்கள் குல தெய்வம் என வாழை மரத்தை ஏற்று படையல் வைத்தால் -அவர்களுடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.
மேலும் வாழையால் ஏற்படும் நன்மைகள்
வாழை என்பது தெய்வீக அம்சம் கொண்டது.வாழையிலையில் உணவு சாப்பிடும் பொழுது நோய் நொடிகள் இல்லாது ஆரோக்கிய வாழ்க்கை ஏற்படும்.
தினமும் ஒரு வாழைப்பழம் பூஜையில் வைத்து சாப்பிட நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும். செல்வ செழிப்பு உண்டாகும். இருபத்தோரு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ..இப்பிறவியில் இருக்கும் பாவங்கள் அனைத்தும் விலகி புண்ணியம் கிடைக்க கூடிய அனைத்து சக்திகளும் வாழைக்கு உண்டு
என்பதை உணர்ந்து வீட்டில் ஒரு வாழைமரம் வைப்போம் -வாழ்வில் வளம் பெறுவோம்.
மேலும் படிக்கலாம்..
சொந்தமாக வீடு மனை வாங்க அதற்கான பரிகாரங்கள் 🍀🌹👇
https://balakshitha.blogspot.com/2020/09/blog-post_27.html
வீடு மனை அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு புத்தகத்தை Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்துப்பயன் பெறலாம்🌹🍀👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
Copy rights at balakshitha



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்