விரதம் இருக்கும் பொழுது மிக முக்கியமான காலையில் முதலில் செய்ய வேண்டிய விஷயங்கள்..
பல சங்கடங்கள் வரும் பொழுது தீர்வு பெற வேண்டி தெய்வத்தை நாடுகின்றோம்.
சங்கடங்கள் பல உண்டு துயரங்கள் மலையுண்டு- துன்பமும் நிறைய உண்டு- நிவர்த்திக்காக மனமும் தெய்வத்தை நாடுவதும் உண்டு.
நம்பினோர் கைவிடப்படார் என்பது பெரியவர் வாக்கு .நம்பிக்கையோடு தெய்வத்தை நினைத்து விரதம் இருந்தால் அதற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். அதற்காகத்தான் விரத நாட்களை நாம் தேர்ந்தெடுத்து வணங்குகின்றோம்.
மாதத்தில் வரக்கூடிய விரத நாட்கள், வருடத்தில் வரக்கூடிய பண்டிகை நாட்கள் என அந்தந்த தெய்வத்தை நினைத்து வேண்டி விரதம் இருந்தால் நினைத்த காரியம் அனைத்தும் ஜெயமாகும்.
அன்றைய நாட்களில் காலையில் முதலில் நாம் செய்யக்கூடிய விஷயங்கள்..
1- அகமும் புறமும் தூய்மையாக மஞ்சள் நீராடுதல்.
2- வேண்டிய காரியங்கள் ஜெயமாக வேண்டி -தெய்வத்தை வணங்கி விளக்கேற்றி சந்தனம் குங்குமம் இட்டு கொள்ளுதல்.
விரதத்திற்கான உணவுமுறை
3- வாழ்வினில் மகிழ்ச்சி நிலவ ஏலக்காய், முந்திரி, சர்க்கரை நிறைந்த பசும்பால்.
4- வாழ்வினில் சுபீட்சம் பெற வாழைப்பழம்
5 - மங்கல வாழ்வு பெற தேங்காய் பால் அல்லது 2 பத்தை கீறிய தேங்காய் துண்டுகள்.
மஞ்சள்
மஞ்சளில் மகத்தான மருத்துவம் சக்திகள் உண்டு .
தோஷம் ,பிணி ,எதிர்மறை சக்திகள் அனைத்தும் விலகி மங்கள வாழ்க்கையை அளிக்கும்.
மஞ்சள் ஒரு சிறந்த நோய் கிருமி நாசினி.
முகம் முழுதும் மஞ்சளை பூசி மங்களகரமான அற்புத அழகோடு திகழ்ந்தது அந்த காலம் . பியூட்டி கிரீம் இது முகத்தில் சாயம் பூசி சேர்க்கை அழகு கொண்டு திகழ்வது இந்த காலம்.
நோய் நொடி எதுவும் வராது தோஷங்களில் இருந்து நம்மை காத்து எதிர்மறை சக்திகள் மறைந்து நம்மை சுற்றி நேர்மறை சக்திகள் சூழ்ந்து எப்பொழுதும் பொலிவாக தெய்வீக சூழல் நிலவ வலம்வரும் சூழ்நிலையை உருவாக்க பழகிக்கொள்ளுங்கள்.
ஆங்கில மருந்துகள் இன்றி மஞ்சள் தூள் ஒன்று போதும் -உடலுக்கும் மேனி அழகுக்கும் முகப்பொலிவிற்கும் அருமருந்தாக அமையும்.
விரத நாட்களில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை நீராடுகின்ற நீரிலே கலந்து நீராட -நினைத்த காரியங்கள் கைகூட தெய்வீக அருள் கிடைத்திட வேண்டி நீராடுதல் சிறப்பு
அகம் புறம் என நம் உடலின் அனைத்திற்கும் அற்புத மருந்தாக பயன்படும் மகத்துவத்தை புரிந்து கொள்வோம் .வாழ்வில் ஆரோக்கியம் கொண்டு அனைத்து சக்திகளும் நிறைந்து வளம் காண்போம்.
கண் திருஷ்டி -தோஷம்- எதிர்மறை சக்திகள் அனைத்தும் விலகி வாழ்வில் சுபிட்சம் பெற கல் உப்பு பரிகாரம் 🌹🍀🌹👇👇👇
பசும் பால்
விரத நாட்களில்தேனீர் அருந்துவதை குறைத்து கொள்ள வேண்டும். காலை எழுந்ததும் தெய்வீக தன்மை கொண்ட பசும்பால் தனில் வாசம் நிறைந்த ஏலக்காய் இனிதான வாழ்க்கையை கொடுக்கக்கூடிய முந்திரி, சர்க்கரை சேர்த்து குடிப்பது விரத நாட்களில் மிகுந்த பலன் அளிக்கும்.
வாழைப்பழம்
தாய்கன்றிலிருந்து அடுத்தடுத்து குலம் காக்கும் வாழைமரத்தில் இருந்து பெறக்கூடிய வாழைப்பழம் -நம்முடைய விரதத்திற்கு மிகுந்த தெய்வீக பலன் அளிக்க கூடிய அற்புத பழம் என்பதால் வாழைப்பழத்தை விரத நாட்களில் காலையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தேங்காய்
சுபகாரியங்களுக்கு அனைத்திற்கும் முதல் வரவேற்பு அளிக்கும் தேன் போன்ற நீர் கொண்ட தேங்காயைை பாலாகவோ அல்லது இரண்டு பத்தையாகவோ எடுத்துக் கொண்டால் நினைத்த காரியங்கள் ஜெயமாக விரதத்திற்கு பலனளிக்கும்.
அன்றைய தினத்தில் தெய்வத்தின் நாமத்தை தொடர்ந்து உச்சரித்து கொண்டே இருக்க வேண்டும் .தீபத்தின் ஒளியை உங்களுக்குள் உணரவேண்டும். மனமும் உடலும் தூய்மை யோடு விரதம் இருந்து தெய்வத்தின் அருள் பெற்று- வாழ்வில் சிறப்பு பெற்று- வேண்டிய பலன் அனைத்தும் தாம் பெற்று- வாழ்ந்த பயனை அடைவோம்.
மேலும் படிக்கலாம் ..
எலுமிச்சை பழத்தில் ஐந்து விதமான பரிகாரங்கள் 🌹🍀👇👇
https://balakshitha.blogspot.com/2020/04/part-2.html
வீடு மனை அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு புத்தகத்தை Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்துப்பயன் பெறலாம்🌹🍀👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
Copy rights at balakshitha

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்