புதன், 30 டிசம்பர், 2020

மேஷ ராசிக்கு சனிப் பெயர்ச்சி எப்படி இருக்கும்-ஒரு அலசல்

 சனிப்பெயர்ச்சி பலன்கள்



27 -12- 2020 அதிகாலை 5-20 மணிக்கு சனி பெயர்ச்சி .

இந்த சனிப் பெயர்ச்சியால் மேஷம் ராசி உடையவர்களுக்கு- இரண்டரை ஆண்டு காலம் பலன் எப்படி இருக்கும் என்பதை காண்போம்.

மேஷம் ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்


 மேஷம் ராசியில் 10-ஆம் இடத்தில் சனி வந்து அமர்கிறார் . லாபஸ்தானம் கேந்திர ஸ்தானம். அருமையான யோகம்- புத்துணர்ச்சி- பலம் -மகிழ்ச்சி மங்களம் அனைத்தும் நிகழக்கூடிய ஒரு அற்புதமான நேரம்.. இந்த சனி பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு நிகழ இருக்கின்றது.


 இவ்வளவு காலம் பட்ட துன்பங்கள் அனைத்தும் விலகும் .இனி வரும் வருடங்கள் அனைத்தும் சுபம். சொந்த உழைப்பில் முன்னேற துடிப்பவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி நிச்சயம் சிந்து பாடும்.

துணிவோடு எந்த செயலை தொட்டாலும்- வெற்றி கிடைக்கும்.

 மேஷ ராசிக்காரர்களின் சிந்தையை குளிரவைக்க ஒரு சிறு துளி..

 கவிதைகள் எழுதிய கவிஞன் ஒருவனை கண்டுகொள்ளவில்லை இவ்வுலகம்.. என வருந்தி வருந்தி வாழ்வினில் விரக்தி  அடைந்து முடிவிலே ..

எழுதிய கவிதைகளை காற்றுக்கு அர்ப்பணிக்க -பறந்த கவிதைகளில் ஒரு காகிதம் கலைஞன் ஒருவன் கையிலே கிடைக்க ..

அடுத்து கவிஞனின் கலையெழுத்து அவனுடைய தலையெழுத்தையே உயர்ந்த நிலைக்கு  மாற்றியது. நிகழ்ந்த நேரம் அவனுடைய ராசியில்  சனி பகவான் வந்து அமர்ந்ததும் பத்தாம் இடம்.

 இப்படித்தான் மேஷராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகின்றது. கவிஞனுக்கு -கவிதை

 கலைஞனுக்கு- வடிவம்  என்பது போல உங்களுக்கு பிடித்தமான ஆர்வமுள்ள தொழிலை தேர்ந்தெடுத்து அதில் முயற்சி, உழைப்பு ,நேர்மை என தொழில் ஆரம்பித்தால் நிச்சயம் வெற்றி காண்பீர்கள்.

தாமஸ குணம் கொண்டவர் சனியாக இருந்தாலும் -சகலமும் நீயே என சரணாகதி அடைந்தால்  வாழ்வில் சகலசௌபாக்கியங்களும் கொடுக்கக் கூடியவர் சனீஸ்வர பகவான்.

சனிக்கிழமை தோறும் சனி பகவானை வணங்கி எள் எண்ணெய்  தீபம் ஏற்றி வாழ்வினில்  வளம் பெறுவோம்.


மேலும் படிக்கலாம் ..

எலுமிச்சை பழத்தில் ஐந்து விதமான பரிகாரங்கள் 🌹🍀👇👇

https://balakshitha.blogspot.com/2020/04/part-2.html


மேஷம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள்_2

சிந்திக்க ஒரு துளி

சனிபகவானின் காயத்ரி மந்திரம்

 ஓம் காகத்வஜாய வித்மஹே 

கட்கஹஸ்தாய தீமஹி

 தன்னோ மந்த ப்ரசோதயாத்



மேஷம் ராசியில் சனிபகவான் பத்தாம் இடத்தில் வந்து அமர்கிறார்.

 இந்த மூன்று ஆண்டுகளுக்கு பலன் எப்படி இருக்கின்றது- என்பதை காண்போம் . 


பத்தாமிடம் மேஷராசிக்கு சகல சௌபாக்கியமும் அள்ளி வழங்குவார் சனி பகவான். 

மேஷம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் வீடியோ🙏🌹👇

https://youtu.be/HtiQARl8PmM

எந்த காரியத்தை தொட்டாலும் அதில் வெற்றி காண்பது உறுதி. மனசஞ்சலம் கொண்ட வாழ்ந்த காலங்கள் விலகி இப்பொழுது காண்கின்ற காட்சிகள் அனைத்தும் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும் காலம் இது .

பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


 இந்த மார்கழி மாதத்தில் சனிப்பெயர்ச்சி நிகழ்கின்றது. அதிகாலைக் குளிரில் அழகான குளத்திலே தாமரை மலர்கள் குளிர்ச்சியாக காட்சிதர அதை கண்டு ரசிக்கும் ஆனந்தமயமான  அற்புதமான புத்துணர்ச்சியை மேஷராசிக்காரர்களுக்கு வழங்குகின்றார் சனி பகவான்.


. இந்த நேரத்தில் முயற்சி செய்தால் பலன் நிச்சயம் கிடைக்கும். முயற்சி உழைப்பு -லட்சியம் எதுவும் இன்றி "மேஷ ராசி என் ராசியில் 10ஆம் இடத்தில் சனி பகவான் என்பதால் ஓஹோவென அமோகமாக  இருக்கும்" என சொல்லிக்கொண்டு செல்வம் தானாகவே கொட்டும் என  கொட்டிக்கொண்டு இராது..


 முயற்சி செய்க.

 முயற்சி திருவினையாக்கும்.

 முயற்சி இல்லையேல் வாழ்க்கை விலகேல் என்பதை புரிந்து கொள்க.


 மனிதனாக பிறந்து விட்டால் வாழ்க்கை சிறக்க வேண்டும் -செல்வம் பெருக வேண்டும் -மகிழ்ச்சி நிலவ வேண்டும்- சுற்றம் வாழ்த்த வேண்டும்.


 இளமையில் இனிமை முதுமையில் மன அமைதி  நிறைந்தால் மட்டுமே தாம் வாழ்ந்ததற்கான முழுமையான பலன் கிடைக்கும் .


அதற்கான நேரம் இப்போது மேஷம் ராசி உடையவர்களுக்கு அமைந்துவிட்டது.  இவ்வளவு காலம் இருந்த துன்பங்கள் விலகி லாபஸ்தானம் அதிகமாக கொடுப்பதற்காக மேஷ ராசியில் வந்து அமர்கிறார் சனி பகவான் .


அதற்கான முயற்சி செய்து- தெய்வபக்தி -லட்சியம்- உழைப்பு அனைத்தும் வேரூன்றி வெற்றி கொள்க.


அன்பு என்னும் அகம் கொண்டு பொறுமை என்னும் குணம் கொண்டு துணிவு என்னும் துணைகொண்டு சோதனை வந்தாலும் எதிர்கொண்டு லட்சிய பாதையை நடந்து சென்று மனிதப்பிறவியின் பயனை அடைவீர்

வீடு மனை அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு புத்தகத்தை Amazon Kindle app   டவுன்லோட் செய்து படித்துப்பயன் பெறலாம்🌹🍀👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

Copy rights at balakshitha



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக