குடும்பம் எனும் நந்தவனத்தில்..
part -1
கணவன் மனைவி அன்பு என்பது...
பெண் என்பவள் மிகப் பெரிய ஆலமரத்தின் வேர் என்று சொல்வார்கள் . அந்த பெண்ணின் மனதிற்குள் எத்தனை கஷ்டங்கள்...
வாழ்க்கை தலைவி எனும் அங்கம் வகிப்பவள் . குழந்தை ஈன்று குலத்தை வாழ வைப்பவள். குடிக்கும் கணவனை கூட தாங்கி பிடிப்பவள். கண்கள் குளமாயினும் கவலையை மறைத்து சிரிப்பவள் என்ன மரத்திற்கு வேராக தாங்கி பிடிப்பவள் பெண்.
ஏன் ஆண்கள் மட்டும் என்ன! அவர்களுக்கு மனம் இல்லையா! அவர்கள் குடும்ப பாரத்தை சுமக்க வில்லையா! அவர்களுக்கு கவலை கிடையாதா.. அவர்களுக்கும் பாசம் தெரியாதா! என பல கேள்விகள் அவர்களிடத்திலும் உண்டு.
கணவன்-மனைவி என ஆரம்பிக்கும் குடும்ப வாழ்க்கையில் நட்பு எனும் மலர் மலர்வதற்கு கடினம் என்று பலர் சொல்வதுண்டு.
நீயா-நானா எனும் ஈகோ எங்களுக்குள் தடுக்கிறது என்றும் சிலர் சொல்வதுண்டு.
கணவன் தன்னிடத்தில் பாசம் காட்ட மாட்டாளா ! என பல குடும்பத்தில் பெண்கள் நினைப்பதுண்டு .மனைவி நம்மை சரியாக புரிந்து கொள்ளவில்லையே ..என்று கணவன் வருந்துவதும் உண்டு.
நான் படுகின்ற கஷ்டம் எங்கே தெரிகின்றது.. நாள் முழுக்க ஓடுகின்றேன் உழைக்கின்றேன். யாருக்காக.. குடும்பத்துக்காக- என புரிந்து கொள்ளாது, முழு நேரமும் சண்டை என்ன வாழ்க்கை இது என புலம்புகிறது கணவன் மனம்.
ஏன் புரியவில்லை புரிந்து கொண்டுதான் நடந்தாலும் என்னை அடிமைப் போல நடத்தும் மனசாட்சி இல்லாத இவரோடு எப்படி வாழ்வது! என கண்களை துடைத்துக் கொள்ளும மனைவிக்கும் துயரம் உண்டு.
மனைவியின் முழு அன்பையும் பெற வேண்டும் என ஆசைப்படுவதில் தவறேது? அதை ஏன் 'ஆணாதிக்கம் அடிமைத்தனம்' என்று நினைக்க வேண்டும்- கணவனுடைய கேள்வி.
இவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு விடை தான் .விடை சொல்வதற்கு முன் நான் இதுவரை பேசிய கணவன் மனைவி உரையாடலை முழுமையாக.கேளுங்கள் கேள்வியிலேயே விடை கிடைக்கும்.
இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு உருவாகும்.
இனி என்னுடைய எழுத்துக்கு வடிவம் கொடுக்கலாம் . திருமணம் எனும் பந்தத்தில் எடுத்ததும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது என்பது கடினம்.
சின்ன சின்ன பூசல்கள் வந்தாலும் தடுமாற்றம் இல்லாத வாழ்க்கை எனும் இரும்புதூணை கெட்டியாக இருவரும் பிடித்துக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள் .
விதைகள்தூவிய நந்தவனம்.
செடி வளர்ந்து வரும் வரை பொறுமையாக கைகோர்த்து நீர் ஊற்றுங்கள். ஆங்காங்கே வளரும் தேவையில்லாத பதர்களை அப்புறப்படுத்துங்கள்.
கணவன் மனைவி சண்டையில் துன்பத்திலும் ஒரு இன்பம் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள் .
ஈகோ எனும் கொடிய நோயில் இருந்து மீண்டு வாருங்கள் .மனம்விட்டு பேசி உங்களுக்கும் பரஸ்பரம் நிலவ முயற்சி செய்யுங்கள்.
ஐந்து வருடத்தில் ஒரு அழகிய பிஞ்சு குழந்தையின் கைகளை பிடித்தவாறு நந்தவனத்தில் ஆனந்தமாய் நடைபோடுங்கள்.
மேலை நாடுகளே நம் இந்திய கலாச்சாரத்தில் கண்டு பெருமிதம் கொண்டு, நம்முடைய பண்பாடுகளை நம்முடைய பழக்கவழக்கங்களை நம்முடையதெய்வீக ஸ்லோகங்களை அவர்களுடைய நடைமுறைக்கு கொண்டுவருவது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய இந்த நிலையில்..
நம்முடைய கலாச்சாரத்தை பண்பாடுகளை மதிப்போம். பின்பற்றுவோம். தெய்வீக மணம் கொண்ட வாழ்வினில் வெற்றி காண்போம்.
குடும்பம் எனும் நந்தவனத்தில் part -2
ஒரு பெண்ணுக்கு பெற்றோர் செய்யக்கூடிய முதல் கடமை 🌹🍀🌹👇👇
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக