புதன், 11 ஆகஸ்ட், 2021

குடும்பம் எனும் நந்தவனத்தில்- பெற்றோர்களின் கவனத்திற்கு

 

குடும்பம் எனும் நந்தவனத்தில் part -2 

ஒரு பெண்ணுக்கு பெற்றோர் செய்யக்கூடிய முதல் கடமை



 ஒரு பெண் கண்ணுக்குள் கண்ணாக பெற்றோரால் வளர்க்கப்படுகின்றாள்  .கண்ணை இமை காப்பது போல் அன்பும் பாசமும் கொடுத்து பெற்றோர்கள் தம் மகளை  வளர்ப்பதற்கு  ஈடு இணை ஆகாது.

'நல்ல முறையில் வளர்த்து  பெண்ணை ஒருவன் கையில்  பிடித்து கொடுத்து விட்டோம் 'என்று நினைப்பது அனைத்து பெற்றோர்களின் கருத்து .

நம் கடமை முடிந்து விட்டது, என நினைக்கும் பெற்றோர்களுக்கு ஒரே ஒரு பதிவை சொல்லவேண்டும் என்று நினைக்கின்றேன்.

ஒரு பெண் குழந்தை பிறந்தால் என்ன செய்வது! என பெற்றோர் கவலைப்படும் நிலை மாறி, இன்று பெண் குழந்தை என்றாலே மகிழ்வோடு ...

ஆண்மகனுக்கு நிகராக நல்ல முறையில் வளர்த்து திருமணம் செய்து வைத்து கடமையை நிறைவேற்றி அதில் நிறைவு காணும் பெற்றோர்களை பார்க்கின்றோம்.

ஆனால் அந்த திருமண பந்தம் நல்ல விதத்தில் அமைந்து விட்டால் பெற்றோர்களுக்கு நிம்மதி.

அதே.. ஒரு பெண்ணுக்கு திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால் அதற்காக அந்த பெண் வாழ்க்கை முழுவதும் துயரப்படும் சோகம் அமைய பெற்றவர்கள் காரணமாக இருக்க கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு பூங்காவில் பெரியவர் ஒருவர்‌
கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருக்கிறார் .அவருடைய பார்வை வானத்தை பார்த்துக் கொண்டிருக்க..‌ அவருக்குள் பல சிந்தனைகள் .

அந்த முதியவருக்கு இரண்டு பெண்கள். நடுத்தர குடும்பம் அழகான நந்தவனம் .மூத்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது. இனிதான வாழ்க்கை .அவர்களுக்கு மகள் மகன் என அழகான குழந்தைகள்.

அடுத்ததாக இரண்டாவது பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கின்றார். நல்ல இடம் .தன் மகள் வாழ்க்கை சிறப்பாக அமையும்- என பலவித எதிர்பார்ப்புகளுடன் பெற்றோர் செய்து வைத்த திருமணம்.. ‌

ஒரு வருடத்திற்குள் துயரங்கள் பல சுமந்து பெண் பெற்றோர் இடத்தில் வந்து விடுகின்றாள். காலம் ஓடுகின்றது . அந்த பெண் செய்வதறியாது பெற்றோரின் பாதுகாப்பில் இன்று.

20 வருடம் ஓடுகின்றது.அவள் வயது இன்றோ  40 . முதியவருக்கும் வயதாகி விட்டது .தன்னுடைய சொந்த காலில் நிற்க தெரியாத அந்த பெண்ணின் வாழ்க்கையை நினைத்து,  இன்று கண் கலங்குகிறார் .

அந்த பெண்ணிற்கு என்று நம்மால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் தினந்தோறும் அந்தப் பெரியவரின் மனதை காயப்படுத்துகிறது .பெரியவரின் கருத்தை என்னிடம் பகிர்கின்றார் .

அந்த பெண்ணின் முகம் என் கண்முன்னே நிற்கிறது .ஏதாவது அந்தப் பெண்ணுக்கு செய்தாகவேண்டும் .பெரியவரின் மனம் நிம்மதி பெற வேண்டும்.

அந்தப் பெண்ணோ... வயது 40 இனி என்னால் என்ன செய்ய முடியும் என்பது அந்த பெண்ணின் கணிப்பு. ஒருமணிநேரம் அவளோடு பொழுதுபோக்காக உரையாடினேன். அந்த நேரம்  வீட்டில் பூத்த மலர்களை நுணுக்கத்தோடு  வேகமாக கட்டிய விதம் என்னை கவர்ந்தது .

அடுத்தது போனில்  யூட்யூப் மூலமாக கலர்கலரான மலர்கள் வைத்து மாலைகள் , கொண்டை வளைவு என கற்றுக் கொடுப்பவர்கள் வீடியோ அனைத்தும் பார்ப்பதற்கு சொல்லிக்கொடுக்க...



ஆர்வத்தோடு கற்றுக் கொண்டாள் மூன்று மாதத்தில் அவளுடைய கைவண்ணம் ஆன்லைனில் அலங்கரிக்க  அடுத்தடுத்து பல ஆர்டர்கள் குவிய குவிய..

  இன்றோ 6 பெண்களுக்கு வேலை கொடுக்கும்   பிஸியாக இருக்கும் சொந்தக்காலில் பணம் சம்பாதிக்கும் சிறப்பான பெண்மணியாக திகழ்கின்றாள்.

பெரியவருக்கும் நிம்மதி.

இப்பொழுது என்னுடைய எழுத்துக்கு ஒரு வடிவம் கொடுக்கலாம். 

தம்முடைய குழந்தைகளுக்கு நல்ல முறையில் வளர்த்து சீர்செய்து..  சொத்து கொடுத்து திருமணம் செய்து வைத்து விடுவது- என்பது பெற்றோரின் கடமை என நினைக்காதீர்கள் .

ஒரு பெண்ணின் எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்குவது பெற்றோர்களின் கடமை .

அனைத்து திருமணங்களும் இறுதிவரை இனிதாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றோம் .திருமண வாழ்க்கை தோல்வி அடைந்தால் அந்த பெண்ணின் வாழ்க்கை பட்டமரமாகி விட கூடாது.

மறுமணம் என்பது அவரவர் விருப்பப்படி அமையலாம் .

ஆனால் மற்றவரை நம்பி வாழாது தன்னுடைய காலில் சுயமாக சம்பாதித்து வாழ்ந்தால் மட்டுமே அந்தப் பெண் கடைசிவரை கௌரவமாக சுயமரியாதையோடு வாழ முடியும். வாழவும் வேண்டும்.

அதற்கான படிப்பு ,தைரியம் ,வேலை என இவற்றை  பெண்களுக்கு வரதட்சணையாக கொடுத்து திருமணம் செய்து வையுங்கள் .உங்கள் பெண் நிச்சயமாக வாழ்வில் சிறந்த பெண்மணியாக திகழ்வாள்.

பெண்கள் எந்த நிலையிலும் தைரியமாக எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் படைத்தவளாக அமைய வேண்டும் என்பதை அனைவரும் புரிந்து கொண்டால் எழுதிய எழுத்துக்கான நிறைவு கண்ட மகிழ்ச்சி காண்பேன்.

அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டு ,நான் எழுதுகின்ற பதிவுகள்..  சராசரி குடும்பத்தில் நடக்கின்ற சூழல்கள் அதற்கான தீர்வுகள் . 

அனைவருக்கும் பகிருங்கள்🙏

குடும்பம் என்னும் நந்தவனத்தில் pat-1 கணவன் மனைவி அன்பு என்பது🌹🍀🌹👇👇https://balakshitha.blogspot.com/2021/08/part-1.html

அன்போடு சேர்ந்த மனம் அமைதியாக மகிழ்ச்சியாக இருப்பதற்கு மேலும் அழகான சில குறிப்புகள் ...🌹🍀🌹👇👇

https://balakshitha.blogspot.com/2021/08/blog-post_7.html


குடும்பம் எனும் நந்தவனத்தில் part-3

மிகப் பெரிய பலத்தை அளிக்க கூடிய மகாலட்சுமி தாமரை முத்திரை🙏🌹👇👇 https://balakshitha.blogspot.com/2021/08/part-3.html

Copy rights at Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்