திங்கள், 29 நவம்பர், 2021

கங்கை அம்மனின் புனித தீர்த்தம்

 

கங்கை அம்மனின் புனித தீர்த்தம்



சிவபெருமானின் ஜடாமுடியில் இருந்து வளைந்து நெளிந்து ஓடும் புனித நதியான கங்கை,  மிக அழகாக இந்த பூமியில்  நம்முடைய துன்பத்தை போக்கி நல்லருள் புரிய  ஓடி வருகின்றாள். தவழ்ந்து வருகின்றாள். புரண்டு வருகின்றாள். 

கோவில் தலங்களில்  இறைவனை காண்பதற்கு செல்கின்றோம்... ஆனால்  வளைந்து நெளிந்து ஓடிவரும் புனித நதியின்  தீர்த்தமோ  கும்பாபிஷேகத்தில் உடல் தனில் பட்டால் குலவாழ்வு தழைக்கும்.

இறந்தவர்களுடைய அஸ்தி புனிதமான கங்கையில் கரைக்க பட்டால் ,  ஆத்மா புனிதமடைந்து பூலோகத்தில் இருந்து  புண்ணிய லோகம் கிட்டும்.

கங்கை நீராடு  என்பார்கள். கங்கை நதியையே  வீட்டிற்கு கொண்டு வரமுடியும் என்று  நம் முன்னோர்கள் சொல்லி வைத்த மிக அழகான வழிமுறை...

ஒரு குவளை நீர்தனில்   'ஓம் ' என்று எழுதி அந்த புனித நீரை கங்கையாக நினைத்து நீராடினால் தோஷம் அனைத்தும் விலகும். வாழ்வு சிறப்பு பெறும் .

இவ்வாறு நாம்  பார்க்காமலேயே கங்கையை நான் தொட்டு மெய்சிலிர்த்து நீராடும்போது கங்கை மிக மிக புனிதமானது என  பார்க்காமலேயே புரிந்து கொள்ளலாம்..


திருவண்ணாமலை சிவனை தரிசிக்க செல்வோர்  அங்கே சந்தவாசலில் அமைந்துள்ள கங்கை அம்மன் ஆலயத்திற்கு சென்று,  அங்கு கங்காதேவிக்கே  கங்கை நீர் அபிஷேகம் செய்த இரட்டிப்பு சக்தி கொண்ட கங்கை தீர்த்தம் பிரசாதம் பெற்று வருக.

அந்த புனிதமான  தீர்த்தம் வீட்டில் தெளித்து   திருமணம்,  புத்திரபாக்கியம், செல்வம், ஆரோக்கியம் என பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்து,  வாழ்வில் கங்கை நீர் போல புனிதமான வாழ்வு பெற்று பெருவாழ்வு வாழ்கவே.


நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

Copy rights at Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக