செவ்வாய், 21 டிசம்பர், 2021

ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் பாடல்- 5

 

ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 

பாடல் - 5



தமிழுக்கு பெருமை சேர்த்து,  ஓசோன் காற்று தன் உடலோடு சேர்த்து ஆரோக்கியம் பெற்று,  நீடூடி வாழ இறைவன் அளித்த கொடையே ... இந்த மார்கழி மாதம், அதிகாலை துயிலெழுந்து ஆண்டாளின் திருப்பாவை தினந்தோறும் பாடி ஆனந்தத்தோடு உவகை கொள்வோம் வாருங்கள்..

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

பாடல் விளக்கம்..

வியப்புக்குரிய செயல்களை செய்கின்ற மாயக் கண்ணனே !
மதுராபுரியில்

  அவதரித்தவனே! பெருகியோடும் தூய்மையான யமுனை நதிக்கரையில் ஓடி ஆடி விளையாடி மகிழ்ந்தவனே! உயர்குடியில் பிறந்த அமுதமாய் வளர்ந்த அணிவிளக்கே !
யசோதை அன்னை இடுப்பில் கயிறு கட்டி அது அழுந்தியதால் தழும்போடு  காட்சி தரும் தாமோதரனே!

நாங்கள் மனம் முழுதும் மகிழ்ந்து மனம் நிறைந்து  நின் திருப்புகழ் பாடி தொழுது,  தூய்மையான மலர் கொண்டு அர்ச்சனை செய்யும்போது..

செய்த பாவத்திற்கு பலன்களும் செய்கின்ற பாவ பலன்களும் தீயினிலே சுட்டுப் பொசுக்கிய தூசு போல காணாமல் போய்விடும் என்பதனை அறிந்து , தோழியரே பாவை நோன்பு இருக்க வாருங்கள் என்று தன் தோழிகளை அழைக்கின்றாள் கோதை.

செல்வம் காட்டிலும் நல்ல மனதை எம்பெருமான் விரும்புகின்றார் . நல்ல மனதோடு, நல்ல பண்போடு, மனம் நிறைந்த பக்தியோடு எனக்கு சாத்துகின்ற  துளசி மாலையே மிகவும் பிடித்தமானது அப்படிப்பட்ட தூய மனம் உடைய பக்தர்களே கடைசியில் எமை  அடைவார்கள் என்று அழைக்கும் பெருமாளின் தாழ்  பணிந்து ...

தினமும் காலை குளிர்ந்த நீர்தனில் உறவாடி  , அழகிய மாக்கோலம் இட்டு, தீபச்சுடர் ஏற்றி , இல்லம் எங்கும் ஒளிவீச நாராயணனின் புகழ் கேட்டு ஆண்டாளின் திருப்பாவை தினம் பாடி...

மார்கழி மாத உலாவினை மகிழ்ச்சியோடு அனுபவித்து, நினைத்த காரியம் கைகூடி , மனம் போல் வாழ்க்கை இனிதாய் அமைந்து வாழ்ந்து வாழ்வின்  பிறந்த பயனை நிறைவு செய்வோம்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

Copy rights at Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்