சனி, 1 ஜனவரி, 2022

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்



பூக்களில் சிறந்த பூ சிரிப்பு . 

இது முன்னோர் நமக்கு சொல்லிக் கொடுத்த கணிப்பு. மனிதனுக்கு அழகைத் தருவது சிரிப்பு .ஆரோக்கியத்தைத் தருவது சிரிப்பு. நல்ல சிந்தனைக்கு தூண்டுகோலாய் அமைவதும் சிரிப்பு.

சிரிப்பு இல்லாத மனிதர்தனை 'வாழ்ந்த மனிதர் ' எனும் சொல் அகற்றி 'வீழ்ந்த மனிதர்' என்று சொல்வார் ‌பலருண்டு.

மலர் மலர்ந்தால் இறைவனுக்கும் (அ) தலையிலும் சூடலாம். சிரிப்பு மலர்ந்தால் மனதிற்கு பலத்தையும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் நாம் பெறலாம் .

கவலை வந்தால் தோய்ந்து விடாதீர். மனதை ஒரு நிலைப்படுத்தி தினந்தோறும் யோகா பயிற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரு பூக்களாக மாறுங்கள். நதியாக மாறுங்கள். பசுமையான நந்தவனத்தில் இருப்பது போன்ற உணருங்கள். உங்கள் மனம் மலர்வடையும். தெளிவடையும். வாழ்வின் வழி தேடலுக்கான விடை கிடைக்கும்.

சிரிப்பு எனும் பொக்கிஷம் மலர் என்றும் நம் முகத்தில் மலரட்டும். அனைத்து உறவுகளின் பலம் நம்மை காக்கட்டும். சிந்தனைக்கு எட்டாத வெற்றிகள் அனைத்தும் குவியட்டும். இறையருள் பெற்ற திகட்டாத வாழ்வு என்றும் நமக்கு கிடைக்கட்டும்.

அன்பு ,பண்பு பணிவு, பக்தி ,நேர்மை என்பதே நம் அழகின் பிரதிபலிப்பாக  தத்துவமாகக் கொண்டு இந்த புத்தாண்டு இனிதே தொடங்குவோம்

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்