திங்கள், 3 ஜனவரி, 2022

ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் - 19

 

ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் - 19



குத்துவிளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல்மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிகொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.


பொருள் விளக்கம்

பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில் , தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகின்ற  கண்ணனை  எழுப்புகின்றாள்  ஆண்டாள். மனைவி சுகம்தனில்   உறக்கம் மேவிட ,மனைவி நப்பின்னை மூலமாக தூது விடுகின்றாள்.


குத்து  விளக்குகள் எரிய, யானைத் தந்தத்தினால்  ஆன கட்டிலின்  மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை அணிந்த கண்ணா ! நீ எங்களுடன் பேசுவாயாக . 



கண்ணனோ  ஓரக்கண்ணால் தன் பக்தைகளைப் பார்க்கிறான்.  ஆண்டாள் பாவைப் பெண்களோடு கோரிக்கை எழுப்ப நிற்பது கண்டு , அவன் ஓரக்கண்களால் பார்த்து நீங்களே அவளிடம் சொல்லுங்கள் என்று தன் மனைவியை நோக்கி சைகை காட்டுகிறானாம். 


உடனே நப்பின்னை பால் தன்னுடைய திருப்பாவை பாடலை கொடுக்கின்றாள் ஆண்டாள்.


மை பூசிய அழகிய கண்களை உடைய நப்பின்னையே! நீ உன் கணவனை நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்பாததற்கு காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படி செய்வது உன் சுபாவத்துக்கு சரியானதா? தாயே! நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்க வில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்!


 அவன் உன் மார்பில் தலைவைத்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றவள் நீ. எங்களுக்கு அவன் வாயால் நன்றாயிருங்கள் என்று ஒரே ஒரு ஆசி வார்த்தை கிடைத்தால் போதும். கண்ணனை உறக்கத்திலிருந்து எழுப்புவாயாக என்று பாடுகின்றாள்.


இந்தப் பாடலிலும் கணவன் மனைவியின் பேச்சு கேட்டு நடப்பதே வாழ்க்கைக்கு இனிமை தரும் என்ற உணர்த்துகின்ற பாசுரமாய் அமைகிறது.




திருமணம் எனும் பந்தத்திற்குள்  உருவாகும் அழகான மலர் தான்தாம்பத்யம். கணவன் மனைவி அன்னியோன்யம் என்பது தாம்பத்யத்தின் பரிமாணம்.

அந்த பந்தம் என்றும் நிலைக்க வேண்டும் என தம்பதியர் சேர்ந்து உறுதி செய்து  நீடூழி வாழ்க வாழ்க வாழ்கவே வாழ்ந்த வாழ்க்கை பயனை அடைகவே.


மலர் மலர்ந்தால் இறைவனுக்கும் மங்கலம் நிறைந்தால் குடும்பத்திற்கும் மாசற்ற மனம் நிறைந்தால் மகிழ்ச்சிக்கும் ,குணம் நிறைந்தால் குலத்திற்கும் ,கைகள் பணித்தால் ஈகைக்கும் வித்திட்டு கடமையில் கண்ணாக வாழ்ந்து , வாழ்ந்த பயனை அடைந்து  வாழ்வினில் இனிது காண்போம்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

Copy rights at Balakshitha





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக