புதன், 12 ஜனவரி, 2022

தை மாத பொங்கல் வாழ்த்துக்கள் தத்துவங்கள்

 

தை மாதம் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் .



இந்த நன்னாளில் இந்த வருடம் மிக உற்சாகமாய் நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய வழிமுறைகளை காண்போம்...

தற்பெருமை தனை அறவே விடுத்து தன்னிகரில்லா குணம் பெறுக

ஆணவத்தை விடுத்து பணிவுடன் நடந்து கொள்க.

கோபத்தை விடுத்து அன்புக்கு அடிபணிக.

மற்றவர் வாழ்வு கண்டு மனம் மயங்கா, தன் வாழ்வில் நிறைவு கொள்க

நேர்மையற்ற செயல் தவிர்த்து தீது இலா மனம் பெருக.

துணிவு, தைரியம், தன்னம்பிக்கை, முயற்சி , அறிவு , ஆற்றல் அனைத்தும் உள்ளடக்கிய இளமைப்பருவம் வீணே என விழுந்து விடாது ..

காலத்தில் பயிர் செய் எனும் பிடியை உறுதியாய் பிடித்து எழுக.

முன்னோர் சொத்து பின்னே இருக்க நமக்கேன் கவலை! எனும் சோம்பல் தவிர்த்து- மற்றவர் கையை எதிர்பாராது தன் கையே தனக்கு உதவி -எனும் கொள்கையை இடைவிடாது பிடித்து நிமிர்ந்து எழுக

அறிவை அதிகம் செலவழித்து அதில் வரும் ஆற்றலை உரமிட்டு- உயர்ந்து நிற்கும் தேக்கு மரத்தடியில் குளிர்காய விரைந்து எழுக

இளமை அழகு இருக்கும்போது- இல்லை என சொல்லாது தானதர்மங்கள் பலசெய்து..

நேர்மைக்கு தலைவணங்கி தீதென்றால் தட்டிக்கேட்டு நன்மைக்கு தோள்கொடுத்து-நலம் பெறுக.

ஆடிப்பட்டம் தேடி விதை என அறிந்து காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என உணர்ந்து இளமையில் பணியாற்றி முதுமையில் ஓய்வெடுத்து மகிழ்வோடு வாழ்க.

'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை- பண்பும் பயனும் அது'

எனும் வள்ளுவர் சொன்னசொல்லை மறந்து போகாதீங்க..

ஒரு மனிதன் தெளிவாக இவ்வளவு கற்றுக்கொள்ள வேண்டுமா! என மலைத்துப் போகாது வாழ்க்கையை அனுசரித்துப் போகக் கூடிய மன வலிமை பெற்று..

தைப்பொங்கல் திருநாளில் இனிவரும் வருடங்கள் நல்லோர்கள் வாழ்த்த, நல்லதே நடந்து , நலம் யாவும் பெற்று , செல்வங்கள் குவிந்து , நல்ல ஆரோக்கியம் பெற்று இளமைக்காலத்தில்இனிதே வாழ்ந்து வாழ்க்கை பயனை அடைந்து வாழ்வின் இனிமை காண்போம்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

Copy rights at Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்