வரலட்சுமி நோன்பு
வரலட்சுமி விரதம் அன்று சொல்லக்கூடிய முக்கியமான ஸ்லோகம்
மனைவி என்பவள் ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்களைவிட சிறந்தவள் ஆவாள் என்று காயத்ரி மந்திரம் கூறுகின்றது. அவளுடைய கழுத்தில் இருக்கும் மாங்கல்யம் 9 இழைகளைக் கொண்டதாக அமைகின்றது .
அந்த ஒவ்வொரு இழையுமே நமக்கு ஒரு கருத்தைச் சொல்கின்றது.
இழை (1) வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும் .
(2 ) மேன்மை உடையவளாய் திகழ வேண்டும்.
(3) ஆற்றல் மிக்கவளாய் சிறக்க வேண்டும்.
(4) தூய்மை கொண்டவளாய் இருக்க வேண்டும்.
(5) தெய்வீக பக்தியோடு
(6) உத்தம குணங்களோடு
(7) விவேகத்தோடு
(8) தன்னடக்கத்தோடு
(9) பொறுமையோடும் ஒரு பெண்
திகழ வேண்டும் என்பதே மாங்கல்யத்தின் இலக்கணம் ஆகும். அந்த மாங்கல்யமே மங்களத்தின் அடையாளமாகத் திகழ்கின்றது.
ஒவ்வொரு பெண்ணும் வரலட்சுமி நோன்பு அன்று உச்சரிக்கக் கூடிய மந்திரமாக விளங்குவது
மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
சஞ்சீவ சரதம் சதம்.
மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நிற்பதற்கு செல்வ செழிப்பு பெருகுவதற்கு
ஆரோக்கியம் நலம் தருவதற்கு
நிம்மதியான வாழ்வு கொடுத்து வாழ்வில் வளம் பெறுவதற்கு சுமங்கலி பெண்கள் அனைவரும் வரலட்சுமி நோன்பான இந்தச் சிறப்பு தினத்தில் 27 , 54 அல்லது 108 முறையென முடிந்தவரை சொல்லவே. தெய்வீக ஒளி இல்லத்தில் நிறைந்து வாழ்வில் இனிது காண்கவே.
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌷
ஆன்மீக கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால் கமெண்ட் இல் பகிரவும் அதற்கான பதிலை அடுத்த பதிவில் அளிக்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக