பிரதோஷம்
சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையில் அர்ச்சனை செய்யும் போது ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்..
கற்பக மரம்- சுபிட்சம் மரம் -தெய்வீக மரம் என மிகவும் புகழ்பெற்ற சிவ பெருமானுக்கு மிகவும் உகந்த மரமே வில்வமரம் .
வில்வமரம் பிறந்த வரலாறு..
மனிதர்களின் தலையெழுத்தை எழுதுகின்ற பிரம்மன் இடத்திலே அவ்வெழுத்து அனைவருக்கும் இனிதாக அமைந்திட வேண்டி- வில்வமரத்தை பிரம்மனோ உருவாக்க " தெய்வீக மரத்தை வணங்குவோர் அனைத்து செல்வமும் பெற்று சிறப்போடு வாழியவே "என வேண்டி அன்னை மகாலட்சுமியானவள் தம்முடைய திருக்கரங்களால் அந்த தெய்வீக மரத்தை நட்டாள்.
அம்மரமே
சுபிட்சமாகி தெய்வீக மரமாக உயர்ந்து நிற்க -அந்த வில்வ மரத்தின் இலைகளை பிரதோஷத்தன்று சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வாழ்க்கையில் அனைத்து சிறப்புகளையும் பெறலாம்.
வில்வ மரத்தின் சிறப்புகள்..
சிறப்பு -1 மும்மூர்த்திகளும் ஒன்றிணைந்து காட்சிதரும் வில்வத்தை அர்ச்சனை சிவனுக்கு செய்கையில் செய்த வினைகள் யாவும் விலகி விடும் .
சிறப்பு- 2 மும்மூன்று இலைகள் சேர்ந்தவாறு காட்சி தரும் வில்வ இலையிலே இடதுபக்கம் பிரம்மா வலதுபுறம் விஷ்ணு -நடுவில் சிவன் என காட்சிதரும் வில்வ இலையால் பிரதோஷத்திலே அர்ச்சனை செய்து வழிபட்டால் குறைகள் யாவும் அகன்று விடும் .
சிறப்பு -3 லட்சம் தங்க மலர் கொண்டு அர்ச்சனை செய்த பூஜா பலன் அனைத்தும் பிரதோஷத்திலே சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டால் கிடைத்து- தங்கமலர் கொண்ட தாமரையாள் மகாலட்சுமியின் அனுகிரகம் கிடைக்கும்.
சிறப்பு -4 வாழ்க்கையில் சுபீட்சம் கிடைத்திடவே - பிரதோஷத்தில் வில்வ இலையால் சிவனுக்கு சிவார்ப்பணம் செய்கையிலே 108 சிவாலயங்கள் சென்ற
புண்ணிய பலனை அடையலாம்.
சிறப்பு- 5 வில்வ இலை எனும் தெய்வீக இலை கொண்டு சிவனுக்கு அர்ச்சனை செய்கையிலே கங்கா என்னும் புண்ணிய நதியில் ஸ்நானம் செய்த பலனை அடையப் பெற்று நோய் நொடிகள் அனைத்தும் அகன்றுவிடும்.
சிறப்பு -6 வில்வ மரத்தில் உள்ள கிளைகளே வேதங்களாக- இலைகளே சிவ ரூபமாக -வேர்களே கோடி கோடி ருத்ரர்கள் ஆக உயர்ந்து நிற்கும் வில்வ மரத்தின் இலைகளை சிவனுக்கு அர்ச்சனை செய்கையிலே மூன்று ஜென்மபாவம் விலகி புண்ணியம் பலன்கள்தான் பெற்று வாழ்க்கையில் நாம் சிறப்பை அடையலாம்.
சிறப்பு -7 அனைத்து செல்வமும் பெறுவதற்கு அஸ்வமேதயாகம் செய்ய வேண்டுமெனில் -இருகை சேர்த்து வில்வ இலையால் சிவனுக்கு அர்ச்சனை செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைத்து விடும் .
பிரதோஷம் அன்று செய்யக்கூடிய வழிபாட்டு விரத முறைகள் 🙏🌹🍀👇👇
http://balakshitha.blogspot.com/2020/07/1-8-2020.html
திருமண தடைகள் நீங்க அற்புதமான சிவன் பிரதோஷ வழிபாடு 🙏🌹🍀🌹👇
http://balakshitha.blogspot.com/2019/05/blog-post_30.html
சிறப்பு - 8 பிரதோஷ தினத்தில்- கணப்பொழுதும் மறவாது சிவாயநம எனும் மந்திரம் ஜெபித்து -வில்வ இலைகளை சிவனுக்கு அர்ச்சனை செய்கையிலே -காசி ராமேஸ்வரம் சென்ற பலன் அனைத்தும் கிடைத்துவிடும் .
சிறப்பு-9 108 சிவாலயங்கள் சென்ற பலன் கிடைத்திடவே -சிறப்பான வாழ்க்கை வாழ்க்கை நல்கிடவே பிரதோஷ தினத்தன்று -வில்வ இலையால் சிவனுக்கு அர்ச்சனை செய்து -புண்ணியப் பலனை அடையலாம்.
சொந்த வீடு மனை அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு முறைகள் 🙏🌹🍀👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
சிறப்பு-10 மனதிலே பல சலனங்கள் இருப்பினும் -குடும்பத்தில் பல குறைகள் இருப்பினும் -சிந்தையிலே பல குழப்பங்கள் இருப்பினும் -மனதில் பல காயங்கள் இருப்பினும் பிரதோஷத்தன்று தளராத உறுதியோடு -ஓம் சிவாய நமஹ திரும்பத் திரும்ப சொல்லி வில்வ இலையால் சிவனுக்கு அர்ச்சனை செய்கையிலே வாழ்க்கையில் வழி நடத்தும் பாதைதனை அவன் காட்டி மலர்கின்ற வாழ்வுதனை கொடுப்பான்- எம்பெருமானின் பாதமே சரணம் சரணம் சரணம்
உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்க 🌹🍀🙏🙏
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக