முருகனை வணங்கும் முன் இடும்பனை வணங்குங்கள்
இடும்பன் என்பவன் யார்!
ஆஜானுபாகுவான உயரம் .
சுருண்ட அடர்த்தியானமீசை .
முரட்டுத்தனமான சுபாவம்
கொண்ட திரு முகம்.
,நின் குறை அறிந்து யாம் தீர்த்து வைப்போம் "என்று சொல்லும் கனிவாக பார்க்கும் கண்கள் .
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் ஆனால் நீண்டு உருண்டு திரண்ட பெரிய பாம்பினை கழுத்திலே உரியாக கயிராக்கி , இருபுறமும் இரு மலைகளை தாங்கியபடி வீரத்தோடு நின்று காட்சி தருகின்றான் இடும்பன்.
யாருக்காக வாழ்கிறோம் ?ஏன் வாழ்கிறோம்? உறவுகள் என்பது என்ன! உறவில் இவ்வளவு பாசம் வைத்தும் உறவுகள் நம்மை மதிக்கவில்லை. எங்கே போவது! என்ன செய்வது! கண் காணாத தூரம் உண்டோ! இறைவா எனக்கு ஒரு நல்ல பதில் சொல்வாயோ! அமைதி காட்டு. ஞானம் கொடு" என்பது பலரது வாழ்வில் மனதில் எழக்கூடிய கேள்வி.
இது இன்று-நேற்றல்ல
பல்லாண்டுக்கு முன் வந்த இதிகாசங்களில் பல பாத்திரங்கள் கேட்ட கேள்விதான்.
பெருமாள் அவதாரம் எடுத்த ராம காவியத்தில் ராமன் சீதைக்கு கூட இப்படி தோன்றியிருக்கலாம் மகாபாரதத்தில் திரௌபதி மட்டும் விதிவிலக்கல்ல. கர்ணன் அர்ஜுனன் போன்ற பலருக்கும் இந்த ஞானோதயம் எழுந்திருக்கலாம்.
துயரம் இந்த வார்த்தைக்கு முற்றுப்புள்ளி கிடையாதா? மனிதப்பிறவி தனில் இன்பம் மட்டுமே வாழ்வில் நிகழாதா!
நிச்சயம் முடியும் முருகனின் அருள் பெற்றவர் வாழ்வில் சோதனையும் தொலைதூரமே .பெரிதளவு மலைபோன்ற துன்பம் தனை கடுகளவு சிறிதாக்கி காணாமல் செய்துவிடுவான் முருகப்பெருமான்.
அந்த முருகனையும் வணங்குவதற்கு அவன் அருள் பெறுவதற்கு அனுமதி கிடைப்பதற்கு முன் நிற்பவன் முருகனின் அருள்பெற்ற இடும்பன்.
இடும்பனுக்குறிய சிறப்பு
முருகனால் ஆட்கொண்டவன். முருகனின் அருள் பெற்றவன். முருகனால் உயிர் பெற்றவன்.
காவடிகள் அனைத்திற்கும் உயிர் தந்தவன்.
முருகனுக்கு பாதுகாவலனாக முன்னில் நிற்பவன்.
இடும்பனை வணங்கிய பிறகு முருகனை பக்தர்களுக்கு காண வழி விடுபவன்.
முதற்கண் விநாயகரை வணங்கி மற்ற தெய்வத்தை வணங்குதற் போல், இரு மலைகளை பாம்பின் உரி கொண்டு தாங்கி நிற்கும் இடும்பனை -முதற்கண் வணங்கி முருகனின் அருள் பெறுவோம் .
சொந்தமாக வீடு மனை யோகம் பெற முருகன் வழிபாடு🙏🌹🍀🌹👇👇👇
https://balakshitha.blogspot.com/2019/12/blog-post_10.html
பூஜை அறையில் நாம் மிக முக்கியமாக செய்யக்கூடிய வழிபாட்டு முறைகள் 🙏🌹🍀🌹👇👇👇👇
https://balakshitha.blogspot.com/2021/04/1.html
Copy rights at Balakshitha


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்