செவ்வாய், 2 ஏப்ரல், 2019

அமாவாசை நமக்கு நாமே நீதிபதி


அமாவாசை ‌ அன்று செய்யகூடிய வழிபாட்டு முறைகள்


வாழ்வது என்பது பெரிதல்ல - வாழ்ந்தேன் 
என்பது பெரிதன்றோ!
நல்லது செய்வது என்றும் நன்று*
அதையும் இன்றே செய்வது நன்றன்றோ*
எனக்கு நானே நீதிபதி *
மனதறிந்து துரோகம் செய்வது நன்றல்ல 
மனசாட்சிக்கு மதிப்பளிப்பது என்றும் நன்றே* என கோட்பாடுகள் பல கொண்டு வாழ்ந்தாலும் நான் யார்! எனும் கேள்வியை மாதத்திற்கு ஒரு முறையாவது

நாம் நம்மையே கேட்பதற்கு அறிவுறுத்தும் ஒரு முக்கியமான தினமே அமாவாசை

மனக்குழப்பங்கள் தீர மங்கல தண்ணீர்க

பெற்றவர்கள் இல்லை என்றால் நாம்  ஏது!
பெற்றவர்கள் நம் மீது வைத்திருக்கும் அன்புக்கு ஈடேது!
நம்மை வளர்ப்பதற்கு அவர்கள் பட்ட சிரமத்திற்கு இணையேது !
நம் கண்ணெதிரே இருக்கும்போது அலட்சியமாக இருந்துவிட்டு மறைந்த பின்னே விழுந்து விழுந்து நினைப்பதிலே  பலன் எது!


என்பதை முதலில் புரிந்து கொண்டு இருக்கும்போது - போற்றி இறந்த பின்னே
வணங்கி புண்ணியத்தை அடையலாம் .

பெற்றவர்கள் நம்மை விட்டு பிரிந்தாலும் ஆத்மாக்களுக்கு பிரிவேது -செயலில் நல்லது செய்யின் ஆனந்தம் கொண்டு தவறுகள் செய்யின்- அருகில் இலாது ஆத்மாக்கள் பரிதவிக்கும் பட்சத்தில் - தெய்வத்தின் அனுகிரகத்த்தோடு நம் மனதில்* நம் இல்லத்தில்* நிறைந்து நாம் செய்கின்ற தவறுகளை சுட்டிக் காட்டுகின்ற ஒரு அற்புதமான தினம் அமாவாசை.


அன்றைய தினத்திலே தாய் வழி உறவின் அம்சமே -சந்திரன் *தந்தை வழி உறவின்- அம்சமே சூரியன்* என இரு உறவுகளும் சேர்கையில்அதாவது சூரியனும் சந்திரனும் -ஒரே நேர்க்கோட்டில் சேருகையில் அத்தினமே அமாவாசை *


அந்த நேரத்தில் இரு வழி ஆத்மாக்களின் சக்திகளோடு தெய்வ சக்தியும் ஒன்று சேரும் போது நம்முடைய மூளையில் சில மாற்றங்கள் நிகழ்கிறது .
அந்த விசேஷமான பூரண அமாவாசை அன்று அந்த ஆத்மாக்களை நாம் வணங்கி பித்ருக்களின் வாழ்த்துக்களை பெரும் பொழுது நாம் செய்த தவறுகள் விலகி *மனம் புனிதமாகி *வாழ்வின் வழிமுறைகளை நமக்கு வழிகாட்டி படிப்படியாக வாழ்ந்தேன் 'என்பது பெரிதன்றோ எனும் தத்துவத்தை
அறிகின்றோம்.

கல்லுப்பு பரிகாரம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள🙏🌹🍀👇👇



அமாவாசை அன்று நாம்செய்யவேண்டி சிறப்பு*
1*அமாவாசைதினத்தன்று அகத்திக்கீரை பசுவிற்கு கொடுக்கையிலே தோஷம் -பாவங்கள் அனைத்தும் விலகிவிடும்.

2* அமாவாசை தினத்திலே ஆத்மாக்களை நினைத்து வணங்கையிலே
துன்பங்கள் அனைத்தும் விலகிவிடும்.

3* அமாவாசை தினத்திலே காகத்திற்கு உணவு வைத்து உண்ணுகையில்
பிதுர்களின் மனம் சாந்தி பெற்று சந்ததிகள் வாழ்வு சிறப்பு பெறும் .

4* அமாவாசை தினத்திலே மஞ்சள் -காவி -சந்தன பொன்னிறம் -போன்ற உடை அணிகையிலே 'நமக்கு நாமே நீதிபதி ' எனும் தத்துவத்தின் உண்மை புரிந்து விடும்.

குழந்தை பிறக்கும் போது மகிழ்ந்து நல்ல முத்துக்களாக *
நாம் ஒளிரும் பொழுது நெகிழ்ந்து நாம் நம் ஆத்மாக்களை அன்போடு நினைக்கையிலே நம்மை மனமுவந்து வாழ்த்தி* ஆனந்தப்படும்
ஆத்மாக்களுக்கு அமாவாசையன்று நினைத்து வழிபட்டு 
வாழ்க்கைப் பயனை அடைவோம்.

மேலும் படிக்கலாம்..

சொந்தமாக வீடு மனை வாங்க அதற்கான பரிகாரங்கள் 🍀🌹👇

https://balakshitha.blogspot.com/2020/09/blog-post_27.html

வீடு மனை அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு புத்தகத்தை Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்துப்பயன் பெறலாம்🌹🍀👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

Copy rights at balakshitha


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக